பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் பாரதி, சௌந்தர்யாவிடம் சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

0
பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் பாரதி, சௌந்தர்யாவிடம் சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் பாரதி, சௌந்தர்யாவிடம் சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் பாரதி, சௌந்தர்யாவிடம் சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கிளம்பிக் கொண்டிருக்க கண்ணம்மா என்னை இறக்கிவிட சொல்கிறார். அப்போது இருவரும் சந்தோசமாக இருந்த நாட்களை நினைத்து பார்க்கிறார்கள்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி காரில் கிளம்ப கண்ணம்மா வந்து என்னை போறவழியில் கடையில் இறக்கிவிடுங்க என சொல்கிறார். ஆனால் பாரதி முடியாது நீ குமார் ஆட்டோவில் போ என சொல்கிறார். அண்ணன் எதோ வேலையாக இருக்கிறாராம். ஸ்கூலில் எல்லாரும் சாப்பாட்டிற்கு காத்துக் கொண்டிருப்பார்கள் அதனால் நீங்க இறக்கிவிட்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என சொல்கிறார். பாரதி சரி ஏறு என சொல்ல, கண்ணம்மா ஏறி உட்காருகிறார்.

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு – முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்!

பின் சீட் பெல்ட் போடு என சொல்ல கண்ணம்மா போட தெரியாமல் இருக்கிறார். இன்னும் போட தெரியாத என கேட்க, காரில் சென்று ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அதான் எல்லாம் மறந்துவிட்டது என சொல்கிறார். பின் பாரதி காரை நிறுத்தி சீட் பெல்ட் போட்டு விடுகிறார். கண்ணம்மா குளுருவதாக சொல்ல பாரதி ஏசியை வேண்டும் என்றே அதிகமாக வைக்கிறார். கண்ணம்மா பாரதியின் பேனாவை கொடுக்க, இதை வைத்துவிட்டு வந்துடீங்க என கண்ணம்மா சொல்கிறார். இது என்ன வாசனை என பாரதி கேட்க, நான் சந்தன சோப்பு போட்டு தான குளிப்பேன் அந்த வாசனை தான் உங்களுக்கு தெரியாதா என கேட்கிறார்.

அப்போது பாரதி கண்ணம்மா இருவரும் பழைய ஞாபகங்கள் பற்றி நினைத்து பார்க்கிறார். கண்ணம்மா குளித்துவிட்டு வர பாரதி அவரை பின்னால் சென்று அணைத்து கொள்கிறார். சந்தன வாசனையில் பாரதி கிறங்கி போகிறார். பின் பாரதி ஏசியை குறைக்க பழைய நியாபகங்களில் இருந்து இருவரும் பழைய நிலைக்கு வருகின்றனர். பின் கண்ணம்மா இறங்கிவிட பாரதி சந்தன வாசனை இன்னும் இருக்கிறது என நினைக்கிறார். இப்படி தான் வாசனையை காட்டி மயக்கிறுவாள் மயங்கக்கூடாது என பாரதி நினைக்கிறார்.

தமிழகத்தில் நாளை (டிச.10) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பின் ஆபிஸ் போக அங்கே கண்ணம்மா கொடுத்த பேனாவை பார்த்து கண்ணம்மா ஞாபகத்துடன் இருக்கிறார். பாரதி மாமா என கண்ணம்மா கூப்பிடுவது போல இருக்கிறது. மறுபக்கம் சௌந்தர்யா கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். வெளியில் பாய் எல்லாம் இருந்தது. இருவரும் தனியாக தான படுத்திருக்கீங்க என கேட்கிறார். உங்க புள்ள ஹோட்டல் போல தான் இங்கே தங்கிருக்காரு, தங்குவது சாப்பிடுவது என எல்லாதிருக்கும் காசு கொடுத்திருவார். என்னமா இப்படி நடக்கிறது என சௌந்தர்யா கேட்க, இல்லையென்றால் ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவார் என சௌந்தர்யா சொல்கிறார்.

அது என்ன சுவரில் எதோ எழுத்திற்கு என சௌந்தர்யா கேட்க, அது உங்க புள்ள இங்கே 6 மாசம் எல்லாம் இருக்கமாட்டாராம் இன்னும் 6 நாட்கள் தான் இருப்பாராம். அதற்கு கணக்கு போட்டு வைத்திருக்கிறார் என சொல்ல, அது எப்படி நீதிமன்றம் 6 மாசம் சொல்லிருக்காங்க நான் அப்பறம் புகார் செய்வேன் என சொல்கிறார். பின் கண்ணம்மா அவர் என்னை கோவப்படுத்தி என் வாய்யால் அதை சொல்ல வைப்பேன் என சொல்லிருக்கார். அதற்காக என்னை எல்லா கஷ்டமும் படுத்துகிறார். ஆனால் நான் பொறுமையாக இருக்கேன் என சொல்ல, செய்யாத தப்பிற்கு 10 வருஷம் இப்படி கஷ்டப்படுகிறேன் கடவுள் என்னை ஏன் இப்படி செய்கிறார் என கண்ணம்மா சௌந்தர்யாவிடம் வருத்தப்பட்டு அழுகிறார். எல்லாம் சரியாகிவிடும் என சௌந்தர்யா ஆறுதல் சொல்ல இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here