கண்ணம்மா வீட்டில் தூங்க முடியாமல் தவிக்கும் பாரதி, பேத்திகளுடன் சந்தோசமாக இருக்கும் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மா வீட்டில் தூங்க முடியாமல் தவிக்கும் பாரதி, பேத்திகளுடன் சந்தோசமாக இருக்கும் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மா வீட்டில் தூங்க முடியாமல் தவிக்கும் பாரதி, பேத்திகளுடன் சந்தோசமாக இருக்கும் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மா வீட்டில் தூங்க முடியாமல் தவிக்கும் பாரதி, பேத்திகளுடன் சந்தோசமாக இருக்கும் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா லட்சுமியுடன் சௌந்தர்யா சந்தோசமாக இருக்க, பாரதி கண்ணம்மா வீட்டில் கொசு கடியால் தூங்க முடியாமல் தவிக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில்,லட்சுமி ஹேமா தூங்க செல்ல சௌந்தர்யா பக்கத்தில் நான் தான் படுப்பேன் என இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். அப்போது சௌந்தர்யா வந்து இருவருக்கும் நடுவில் படுகிறார். அப்போது அவரை கதை சொல்ல சொல்கின்றனர் அவர் சினிமாவில் வரும் கதை ஒன்றை சொல்கிறார். அதை கேட்டு ஹேமா சினிமா கதையை மாறாமல் சொல்லிருக்கீங்க என சொல்ல நாளைக்கு புது கதை சொல்கிறேன் என சௌந்தர்யா சொல்கிறார்.

பின் சாந்தி மாயாண்டியை காணாமல் இருக்க, மாயாண்டி வெளியே இருந்து வருகிறார். அவரிடம் பாரதி கண்ணம்மா பற்றி எதுவும் செய்யாமல் இப்படி ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறாய் என கேட்கிறார். வெளியே சென்றால் தான் எல்லாம் தெரியும் என மாயாண்டி சொல்ல, கோர்ட் உத்தரவை பாரதி கேட்பாரு என நினைக்கிறீயா என சாந்தியிடம் கேட்கிறார். அது எப்படி பாரதிக்கு தான் கண்ணம்மாவை பார்த்தாலே பிடிக்காதே அப்பறம் எப்படி சேர்ந்து வாழ்வார்கள் என கேட்கிறார். நீ நினைப்பது போல எதுவும் இல்லை பாரதி கண்ணம்மா உடன் வாழ அவளுடைய வீட்டிற்கே சென்றுவிட்டார். இருவருக்கும் இடையே குழந்தை தொந்தரவாக இருக்கும் என பாட்டி வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் என சொல்ல இப்பவே வெண்பாவிற்கு போன் செய்து சொல்லு என மாயாண்டி சொல்கிறார்.

தமிழகத்தில் ஜனவரி 24 வரை கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கண்ணம்மா வீட்டில் பாரதியை ஏசி ரூமில் படுக்க சொல்கிறார். ஆனால் பாரதி முடியாது என சொல்லி ஹாலில் படுகிறார். இங்கே கொசு கடிக்கும் என சொல்ல அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என பாரதி சொல்கிறார். பின் கண்ணம்மா தூங்க செல்ல, பாரதி கொசு கடியால் தவிக்கிறார். உள்ளே கண்ணம்மா நிம்மதியாக தூங்க பாரதி கோவப்படுகிறார். பின் அஞ்சலி எதோ மந்திரம் படிக்க அகில் வருகிறார். என்ன படிக்கிற என கேட்க கண்ணம்மா பாரதி ரொம்ப நாள் கழித்து சேர்ந்து இருக்க போறாங்க அதனால் தான் இந்த மந்திரம் படித்தால் எந்த கஷ்டமும் வராது என நினைக்கிறார்.

விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பின் அகில் வேலைக்கு போக சொல்லி அஞ்சலி சொல்கிறார். பாரதி தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்க, ஒரு நாளைக்கே முடியவில்லை. இன்னும் 6 மாதம் எப்படி இருக்க போகிறேன் என நினைக்கிறார். அப்போது பாரதிக்கு ரொம்ப பசிக்க அடுப்படிக்கு வந்து எதாவது இருக்கா என பார்க்கிறார். அப்போது கடலை இருக்க அதை எடுத்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார். கண்ணம்மா நிம்மதியாக தூங்கி கொண்டிருக்க பாரதி கதவை திறந்து பார்த்து இப்படி தூங்குறாளே என நினைக்கிறார். பின் பாரதியும் தூங்க செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here