லக்ஷ்மியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதி கண்ணம்மாவை காரில் அனுப்ப சௌந்தர்யா செய்த திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
லக்ஷ்மியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதி கண்ணம்மாவை காரில் அனுப்ப சௌந்தர்யா செய்த திட்டம் - இன்றைய
லக்ஷ்மியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதி கண்ணம்மாவை காரில் அனுப்ப சௌந்தர்யா செய்த திட்டம் - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
லக்ஷ்மியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதி கண்ணம்மாவை காரில் அனுப்ப சௌந்தர்யா செய்த திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா மற்றும் பாரதி குழந்தைகள் நினைப்பாக இருக்க இருவரும் பார்க்க வருகின்றனர். பின் சௌந்தர்யா திட்டமிட்டு பாரதி கண்ணம்மாவை ஒரே காரில் அனுப்பி வைக்கிறார்கள்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி ஹேமா நினைப்பில் இருக்க அவளை பார்க்க செல்கிறார். அதே போல கண்ணம்மாவும் லட்சுமி நினைப்பாக இருக்க செல்கிறார். பின் கண்ணம்மா வாசலில் நின்று சௌந்தர்யாவிற்கு போன் செய்கிறார். அப்போது அவர் வந்து என்ன இப்படி வந்து நிற்கிறாய் உங்க இருவருக்கும் எதாவது சண்டையா என கேட்கிறார். இல்லை லட்சுமி ஞாபகமாக இருந்தது. அதான் வந்தேன் என சொல்கிறார். குழந்தைகள் கூட சொல்வதை கேட்டு இருக்காங்க நீ இப்படி இருக்கிறாய் என சௌந்தர்யா கேட்க, மேலே சென்று பார்க்க சொல்கிறார்.

அவர் அங்கே சென்று பார்த்தால் அங்கே பாரதி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். நீ எதற்கு இங்கே வந்தாய் என பாரதி கேட்க நீங்க எதற்கு வந்தீங்களா அதற்கு தான் என கண்ணம்மா சொல்கிறார். கண்ணம்மா தனியாக தான் மேலே போனால் என்ன பேசுகிற சத்தம் கேட்கிறது என சொல்லி சௌந்தர்யா வந்து பார்க்க அங்கே பாரதி கண்ணம்மா இருவரும் இருக்கிறார்கள். அப்போது சௌந்தர்யா நீ எப்படி வந்தாய் என பாரதியை கேட்க சுவர் ஏறி குதித்து வந்தேன் என சொல்கிறார்.

தடுப்பூசி செலுத்தி கொண்ட இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று – அச்சத்தில் பொதுமக்கள்!!

எதற்கு இங்கே வந்த என கேட்க, ஹேமாவை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என உங்களுக்கு தெரியும் அல்லவா அப்பறம் என்ன இப்படி கேட்கிறீர்கள் என சொல்கிறார். மதியம் ஸ்கூலில் அவளை பார்த்தாய் என கேட்டு சின்ன குழந்தைகள் கூட சொல்வதை கேட்டு இருக்காங்க உங்களால் இருக்க முடியவில்லை. என சொல்லி கிளம்பி சென்று குமாருக்கு போன் செய்கிறார். குமார் எங்கே இருக்கிறாய் என கேட்க, வீட்டு வாசலில் என சொல்கிறார். நீ சென்றுவிடு என சௌந்தர்யா சொல்கிறார்.

பின் கண்ணம்மா வெளியே வந்து பார்க்க அங்கே குமார் இல்லை. அந்த நேரம் பாரதி காரில் கிளம்ப சௌந்தர்யா கண்ணமாவை கூட்டி செல்ல சொல்கிறார். என்னால் முடியாது என பாரதி சொல்ல, கண்ணம்மா நான் போகமாட்டேன் என சொல்லி கார் புக் செய்கிறார். ஆனால் கார் எதுவும் கிடைக்காமல் இருக்க, பாரதியை மிரட்டி காரில் கூட்டி செல்ல சொல்கிறார். கண்ணம்மா காரில் வர பாடல் ஒன்று ஓடுகிறது. அப்போது பாரதி பாடலை நிறுத்த கண்ணம்மா நன்றாக தான இருக்கிறது என சொல்கிறார்

அடுத்து வர இருக்கும் மிகப்பெரிய அறிவிப்பு? கலைஞர் டிவியின் சஸ்பென்ஸ்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

என்னை தனியாக விட்டு சென்றுவிட்டீர்கள் என கேட்க, நீயம் நான் ரூமில் தூங்குகிறேன் என நினைத்து தான வந்த என கேட்கிறார். நீ திட்டமிட்டு குமார் ஆட்டோவை அனுப்பிவிட்டாய் என கேட்க, நான் வேண்டாம் என்று தான் சொன்னேன் அத்தை தான் என்னை ஏற்றிவிட்டார்கள் இப்பவே என்னை அனுப்புங்கள் என சொல்கிறார். பாரதி வேற பக்கமாக போக கண்ணம்மா ஏன் இந்த பக்கமாக போறீங்க என கேட்கிறார். ஒரு முக்கியமான இடத்திற்கு போகிறோம் என பாரதி சொல்கிறார். இந்த இரவில் எங்கே போகிறார் என கண்ணம்மா யோசிப்பதாக பாரதியிடம் சொல்ல, பாரதி மோர் குடிக்க அழைத்து செல்கிறார்.

அப்போது பாரதி மோர் குடிக்க செல்ல, மோர் கடைக்காரர் காரில் யாரு உங்க சம்சாரமா என கேட்கிறார். பாரதி என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். அவங்களையும் வர சொல்லுங்க என மோர் கடைக்காரர் சொல்ல, பாரதி எனக்கு கொடுங்க என கேட்கிறார். பின் பாரதி மோர் வாங்கி ரசித்து குடிக்க கண்ணம்மா அதை பார்த்து இவர் என்ன இப்படி இருக்கிறார் என நினைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here