குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட பாரதி, லட்சுமியிடம் உன் அப்பாவிடம் சேர்த்து வைப்பேன் என சொல்லும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

0
குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட பாரதி, லட்சுமியிடம் உன் அப்பாவிடம் சேர்த்து வைப்பேன் என சொல்லும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட பாரதி, லட்சுமியிடம் உன் அப்பாவிடம் சேர்த்து வைப்பேன் என சொல்லும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட பாரதி, லட்சுமியிடம் உன் அப்பாவிடம் சேர்த்து வைப்பேன் என சொல்லும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதி குழந்தைகளுடன் ஸ்கூலில் சந்தோசமாக இருக்கின்றனர். பின் ஹேமா ஸ்கூலில் நடந்தது பற்றி சௌந்தர்யாவிடம் சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஸ்கூலில் கண்ணம்மா லட்சுமிக்கும், பாரதி ஹேமாவிற்கும் சாப்பாடு ஊட்டி விடுகின்றனர். பின் ஹேமா பாரதி கூட விளையாடி கொண்டிருக்க, லட்சுமி அதை பார்த்து என்னை அப்பாவிடம் சேர்த்து வைக்கிறேன் என சொல்லிருக்க மறந்துவிடாதே என சொல்ல, உன் அப்பா உன் கண்ணு முன்னாடி தான் இருக்காரு, நிச்சயம் உன்னை சேர்த்து வைப்பேன் என கண்ணம்மா சொல்கிறார். பின் அகில் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வர, ஹேமா அப்பா வந்தாங்க என சௌந்தர்யாவிடம் சொல்கிறார். என்னுடைய அம்மாவும் வந்தாங்க என லட்சுமி சொல்ல, இரண்டு பேரும் ஒன்றாக வந்தாங்க என குழந்தைகள் சொல்கிறார்கள்.

WhatsApp இல் வரப்போகும் சூப்பர் அப்டேட் – தவறாக அப்டேட் ஆன ஸ்டேட்டஸை உடனே நீக்கலாம்!

எப்படி என சௌந்தர்யா கேட்க அப்பா கார் பழுதாகிவிட்டதாம் அதான் அவங்க டாடிக்கு உதவி செய்தார்கள் என சொல்கிறார். பின் சௌந்தர்யா வேணுவிடம் குமார் மூலமாக திட்டம் போட்டதை பற்றி சொல்கிறார். பின் ஹேமா லட்சுமி விளையாடி கொண்டிருக்க சிறு வயது போட்டோ பார்க்கலாம் என ஹேமா ஸ்டோர் ரூம் அழைத்து செல்கிறார். அங்கே பாரதி கண்ணம்மா போட்டோ இருக்கிறது. அப்போது சரியாக சௌந்தர்யா வந்து அதை வாங்கி வைக்கிறார். பாரதி காரை சரி பார்க்க எதுவும் பிரச்சனை இல்லை என மெக்கானிக் சொல்கிறார். அப்போது சாந்தி அங்கே வர வெண்பா அம்மா உங்களையே நினைத்து 9 வருஷம் கல்யாணம் செய்யாமல் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு நீங்க துரோகம் செய்யலாமா என கேட்கிறார்.

உங்களுக்கு பிரச்சனை என்றால் அவங்களை தேடி தான வருவீங்க இப்போ அவங்களுக்கு பிரச்சனை நீங்க வரவே இல்லை என சொல்ல, கோவப்பட்ட பாரதி இனிமேல் அந்த வெண்பாவை என் கண்ணு முன்னாடி வர வேண்டாம் என சொல் என சொல்கிறார். எவ்வளவு தைரியம் இருந்தால் நான் எழுதியது போல எழுதி அஞ்சலி உயிரை எடுக்க பார்ப்பாள் என சொல்ல, அந்த கண்ணம்மா உங்களுக்கு இவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கா அவளுடன் சேர்ந்து வாழ இருக்கீங்களே என கேட்க, இனிமேல் இதை பத்தி பேசாத நீ யாரு என பாரதி கோவமாக பேசுகிறார்.

கோவையில் நாளை (டிச.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பின் கண்ணம்மா ஆப்பம் சுட்டுக் கொண்டிருக்க பாரதி அதை மறைந்து நின்று பார்க்கிறார்,. அப்போது குமார் அங்கே வர உட்கார்ந்து சாப்பிட டைனிங் டேபிள் வாங்க இருப்பதாக சொல்கிறார். எதற்கு என கேட்க, இத்தனை நாளாக நீயும் லட்சுமி மட்டும் இருந்தீங்க இப்போது தான் மச்சான் வந்துட்டாங்களே என சொல்ல, பாரதி கோபப்படுகிறார். கண்ணம்மா எனக்கு தங்கச்சி என்றால் நீங்க எனக்கு மச்சான் தான என சொல்ல, பாரதி கோபப்படுவதை பார்த்து கண்ணம்மா சும்மா இருங்க அண்ணா என சொல்கிறார். பின் கண்ணம்மா சாப்பிட வர சொல்ல,சமைத்து போட்டு என்னை மயக்க பாக்கிற என பாரதி சொல்கிறார். மயங்கிருவோம்னு உங்களுக்கு பயம் இருக்கிறதா என கேட்க, நான் இன்றும் ஹோட்டலில் வாங்கி சாப்பிடுகிறேன் என பாரதி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here