
பாரதி கண்ணம்மா சேர்ந்து இருக்க சௌந்தர்யா செய்த திட்டம், பெற்றோரை பார்த்த சந்தோஷத்தில் குழந்தைகள் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா சேர்ந்து இருக்க சௌந்தர்யா குமாரை வைத்து திட்டம் ஒன்றை திட்டுகிறார். பின் சாந்தி ஜோசியரை அழைத்து வெண்பா ஜாதகத்தை பார்க்க சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி ஹேமாவை பார்க்க ஸ்கூலிற்கு கிளம்புகிறார். அப்போது கார் பழுதாகி விட குமாரை அழைத்து என்ன ஆச்சு என பார்க்க சொல்கிறார். அப்போது குமார் பார்த்து என்ன ஆச்சு என தெரியவில்லை என சொல்கிறார். பின் பாரதி ஆட்டோவில் எற கண்ணம்மா வந்து என்ன என்னைவிட்டு போறீங்க என கேட்கிறார். பின் இருவரும் சேர்ந்து ஆட்டோவில் எற, இறங்கி வந்த குமார் சௌந்தர்யாவிற்கு போன் செய்கிறார். அவர் சௌந்தர்யாவிடம் நீங்க சொன்னது போல செய்துவிட்டேன் என சொல்கிறார்.
தமிழகத்தில் நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் அறிவிப்பு!
அடிக்கடி இது போல செய்து இருவரையும் சேர்த்து வைத்துவிடு என சௌந்தர்யா சொல்ல, கண்ணம்மா எனக்கு தங்கச்சி போல அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். அப்போது இருவரும் ஸ்கூலிற்கு கிளம்ப குமார் வேண்டும் என்றே குழியாக இருக்கும் பக்கம் செல்ல ஆட்டோ தூக்கி தூக்கி போடுகிறது. அப்போது பாரதி உன் ட்ரைவர் அண்ணனை வைத்து என்னை கொல்ல பார்க்கிறாய் என புலம்ப இருவரும் நெருக்கமாக அமருகின்றனர்.
மறுபக்கம் சாந்தி ஜோசியரை அழைத்து வருகிறார். மாயாண்டி என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்க, வெண்பா மற்றும் பாரதியின் ஜாதகத்தை கொண்டு வந்து கொடுக்கிறார். முதலில் வெண்பா ஜாதகத்தை பார்த்துவிட்டு இது ஒரு ராட்சசியின் ஜாதகம் இவள் வழியில் யாராவது வந்தால் கொல்ல கூட செய்யலாம். அது போல இவள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார். இது சூர்ப்பனகையின் ஜாதகம் என சொல்கிறார். பின் பாரதி ஜாதகத்தை பார்த்து இது ஒரு வெள்ளந்தியான மனிதரின் ஜாதகம். இவர் கையால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்.
இருவருக்கும் கல்யாணம் ஆகுமா என சாந்தி கேட்க, கட்டத்தின் படி இந்த ஜாதகக்காரருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. ஆனால் இதனை நாளாக இவர் திருமணவாழ்கையில் புயல் அடித்தது. கணவன் மனைவி பிரிந்து இருந்திருப்பார்கள். ஆனால் இனி அப்படி இல்லை இருவரும் சேர்ந்து வாழும் நேரம் வந்துவிட்டது என சொல்கிறார். பின் பாரதி ஸ்கூல் உள்ளே வரை வந்து நிற்க, ஹேமா இருவரையும் ஒன்றாக பார்த்தால் சந்தேகப்படுவார்கள் என சொல்கிறார். கண்ணம்மா எதாவது சொல்லி சமாளிக்கலாம் என சொல்ல, கண்ணம்மா பாரதி ஒன்றாக இறங்குகின்றனர்.
தமிழகத்தில் 3 பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று!
பின் கண்ணம்மா பாரதி ஒன்றாக இறங்க குழந்தைகள் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அவங்களை பார்த்தால் நம்ம அம்மா அப்பா போலவே இருக்கு என லட்சுமி சொல்ல, ஆமாம் நானும் அதை தான் நினைத்தேன் என ஹேமா சொல்கிறார். சமையல் அம்மா எனக்கு அம்மாவா வந்திருக்கலாம் என ஹேமா சொல்ல, எனக்கும் உன் டாடி போல அப்பா இருக்கலாம் என லட்சுமி சொல்கிறார். பக்கத்தில் வந்ததும் குழந்தைகள் ஓடி சென்று அம்மா அப்பாவை கட்டி அணைத்து கொள்கின்றனர். ஹேமா டாடி உங்களை மிஸ் செய்தேன் என சொன்ன லட்சுமி நம்ம வீட்டில் தான் இருக்கிறாள் அவளை அனுப்ப சமையல் அம்மா சம்மதம் சொன்னதற்கு நீங்க நன்றி சொல்ல வேண்டும் என சொல்கிறார். பின் கண்ணம்மா சாப்பாடு ஊட்டி விட குழந்தைகள் சாப்பிடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.