ஹேமாவை சௌந்தர்யா வீட்டில் கொண்டு போய் விடும் கண்ணம்மா, வம்பிழுக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

1
ஹேமாவை சௌந்தர்யா வீட்டில் கொண்டு போய் விடும் கண்ணம்மா, வம்பிழுக்கும் பாரதி - இன்றைய
ஹேமாவை சௌந்தர்யா வீட்டில் கொண்டு போய் விடும் கண்ணம்மா, வம்பிழுக்கும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
ஹேமாவை சௌந்தர்யா வீட்டில் கொண்டு போய் விடும் கண்ணம்மா, வம்பிழுக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், இரண்டாவது குழந்தை பற்றி குழப்பத்தில் கண்ணம்மா யோசனை செய்து கொண்டிருக்கிறார். பின்னர் ஹேமாவை கொண்டு போய் பாரதி வீட்டில் விடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது பற்றி நினைத்து பார்த்து குழப்பத்தில் இருக்கிறார் கண்ணம்மா. ஒரு வேளை வெண்பா ஊசி போட்டு தன்னை கொல்ல வந்த பின்னர் குழந்தையை எதாவது செய்திருப்பாளா என நினைத்து பார்க்கிறார். ஆனால் அப்போது துர்கா வந்து வெண்பாவை இழுத்து சென்றாரே. அப்போது நன்றாக நினைவு இருந்ததே என நினைக்கிறார். நிச்சயம் அத்தை தன்னை தேடி அங்கே வந்திருப்பார்.

ஏற்கனவர் ஸ்கேன் எடுக்கும் போது அங்கே வந்தாரே அதே போல குழந்தை பிறந்த போதும் வந்துருப்பார் என்று நினைத்து பார்க்கிறார். வேற யாருக்கு இது பற்றி தெரியும், எனக்கு இரட்டை குழந்தை பிறந்ததே 8 வருடம் கழித்து இப்போ தான் எனக்கே தெரிந்தது. நான் 8 வருடங்களுக்கு முன் பிறந்த அன்னைக்கே குழந்தையை காணவில்லை என யாரிடம் கேட்க முடியும் என நினைத்து பார்க்கிறார்.

விஜய் டிவி VJ அர்ச்சனாவின் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நிலை – ரசிகர்களுடன் பகிர்வு!

மறுநாள் ஹேமாவிற்கு டீ கொடுக்க தன் கனவில் அப்பா வந்ததாகவும் என்னை விட்டுவிட்டு அங்க போய் இருக்கியே என்று கேட்டதாக ஹேமா சொல்கிறார். நான் தான் லட்சுமியை பிரிந்து இருக்க ஹேமா ஏன் என்னோடு அப்பாவை பிரிந்து இருக்கனும் என்று நினைக்கிறார். பின்னர் ஹேமா துணிகளை எடுத்துவைக்க சொல்கிறார். உங்க வீட்டிற்கு போவோம் என்று சொல்கிறார். நாம உன் டாடிக்கு தெரியாமல் போய் சர்ப்ரைஸ் பண்ணுவோம் என சொல்கிறார்.

பின்னர் ஹேமா துணிகளை எடுத்து வைத்துவிட்டேன். நீங்க வந்து பெட்டியில் வைங்க என சொல்கிறார். இவளுக்கு எதற்கு என் மேல இவ்வளவு பாசம் என நினைத்து பார்க்கிறார். ஹேமா அவள் தோழிக்கு போன் செய்து வீட்டிற்கு போகிறேன் என சொல்கிறார். என் பொண்ணு லட்சுமி அங்க இருக்கா, ஹேமா இங்க இருக்கா என் இன்னொரு பொண்ணு எங்கே என நினைத்து பார்க்கிறார். பின்னர் குமார் மாமா வந்து இருவரும் கிளம்புகின்றனர்.

கண்ணம்மா தான் ஹேமாவின் அம்மா, உண்மையை அறிந்து கொண்ட பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாரதி, லட்சமி அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சௌந்தர்யாவும் வேணுவும் மறைந்து இருந்து கண்ணம்மா எப்போ வருவாள் என்று தெரியவில்லை அவள் வந்தால் பிரச்சனை பெரிதாகும் என நினைக்கிறார். அப்போது ஹேமா வர பாரதி சந்தோஷத்தில் இருக்கிறார். பின்னால் கண்ணம்மா வர சௌந்தர்யாவும் வேணுவும் பதட்டத்தில் இருக்கின்றனர். பின்னர் லட்சுமி கண்ணம்மாவை பார்த்து ஓடி சென்று கட்டி பிடித்துக் கொள்கிறார்.

அஞ்சலி ஹேமா, லட்சுமியை உள்ளே அழைத்து செல்ல, பாரதி கண்ணம்மாவிடம் நீங்க இவ்வளவு நாள் ஹேமாவை பார்த்துக் கொண்டதற்கு எதாவது நான் கொடுக்க வேண்டும் என கேட்கிறார். எதையும் வாங்கி எனக்கு பழக்கம் இல்லை என கண்ணம்மா சொல்ல, எனக்கும் இலவசமாக எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என சொல்கிறார். கண்ணம்மா சௌந்தர்யாவை காணவில்லை என தேட சௌந்தர்யாவும் வேணுவும் மறைந்து நிற்கின்றனர். பின்னர் பாரதி உன் மகளை கொண்டு வந்து இங்கே விடு லட்சுமி போல படிக்கவைக்கிறேன் என்று பாரதி சொல்ல, லட்சுமியை படிக்க வைத்ததே போதும் என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Mokka serial…oru pointa vache kadhai alakkuraanunga..athukku mela sarakku illa pola…sathiyama indha serial la option irundha naan block eh panniduven…indha madiri serials ah kandippa yaarum paarkkave koodathu…unwanted tension..metally sickness vandhidum…avlo periya appa takkar Dr.bharathi kku..oru test edukka mudila..avanga hospital laye..sample replace pannittaanga..avlo sensitive visayatha…yaaravadhu..third person ta koduthuttu room la iruppaangala…humbak…first of all oru doctor madiri eppavume bharathi dressings irundhathu illa..doctors mostly preferred plain and lining shirts not checked shirts….make up bharathikku worst..always looking sweaty face and wetty shirts…not looking good…please director quite this serial..otherwise you will finish this serial at overnight due to no sarakku anymore….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!