அஞ்சலி வளைகாப்பிற்கு கண்ணம்மாவை அழைக்க சொல்லும் சண்முகம் – பாரதியின் முடிவு என்ன? இன்றைய எபிசோட்!

0
அஞ்சலி வளைகாப்பிற்கு கண்ணம்மாவை அழைக்க சொல்லும் சண்முகம் - பாரதியின் முடிவு என்ன? இன்றைய எபிசோட்!
அஞ்சலி வளைகாப்பிற்கு கண்ணம்மாவை அழைக்க சொல்லும் சண்முகம் - பாரதியின் முடிவு என்ன? இன்றைய எபிசோட்!
அஞ்சலி வளைகாப்பிற்கு கண்ணம்மாவை அழைக்க சொல்லும் சண்முகம் – பாரதியின் முடிவு என்ன? இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலியின் அம்மா வளைக்காப்பு செய்ய திட்டமிடுகிறார். சண்முகம் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கண்ணம்மாவை அழைக்க வேண்டும் என கேட்கிறார். கண்ணம்மாவிற்கு மீண்டும் தலை சுற்றால் ஏற்பட டாக்டரை பார்க்க கண்ணம்மா நினைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலியின் அம்மா பாக்கியா டிவியில் வளைகாப்பு பாடலை பார்த்து எழுதி கொண்டிருக்கிறார். அப்போது சண்முகம் அங்கே வந்து என்ன செய்கிறாய் என்று கேட்கிறார். அஞ்சலிக்கு வளைகாப்பு நடத்தணும்ல அதான் டிவியில் பாடல் பார்த்து என்னவெல்லாம் தேவை என எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். வளைகாப்பு நிகழ்ச்சி மாமியார் வீட்டில் தான நடத்த வேண்டும் என சண்முகம் சொல்ல, நம்ம வீட்டில் ஒரு விசேஷமும் நடக்கவில்லை அதனால் தான் நான் இதை இங்கே வைக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று சொல்கிறார்.

டிக்டாக் சூர்யாதேவி தற்கொலை வீடியோ; ஃபேனில் தொங்கிய தூக்கு கயிறு – போலீசார் கடும் அதிர்ச்சி!

அதற்கு நிறைய செலவாகுமே அதுவும் சம்மந்தி அம்மா ரொம்ப பெருசா பண்ணனும் சொல்லுவாங்க என்று சொல்ல அதற்காக பல வருசமாக சீட்டு கட்டி காசு வச்சுருக்கேன் என்று சொல்கிறார். என் பொண்ணுக்கு வளைகாப்பு பண்ண யாருக்கு அக்கறை இருக்கு என்று சொல்ல, உடனே சண்முகம் கண்ணம்மா அம்மா இல்லாமல் வளர்ந்த பொண்ணு அதான் கொஞ்சம் அதிக பாசம் அவ மேல என்று சண்முகம் சொல்கிறார்.

சண்முகம் பாக்கியாவிடம் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கண்ணம்மாவை அழைக்க வேண்டும் என கேட்கிறார். டாக்டர் தம்பி வந்தால் தேவையில்லாத பிரச்சனை வரும் என பாக்கியா சொல்ல, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சண்முகம் சொல்கிறார். அதன் பின்னர் அஞ்சலி உடல்நிலையை நினைத்து கவலைபடுகிறார். தான் செய்வது சரியா தவறா என தெரியாமல் இருக்க மீண்டும் நெஞ்சு வலி ஏற்படுகிறது. உடனே வெண்பாவிற்கு போன் செய்து பேசுகிறார். அப்போது வெண்பா அப்படி தான் இருக்கும் நான் கொடுத்த மாத்திரையை போடு என சொல்கிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ செப்.9 இல் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!

அதை போட்டதும் மீண்டும் அஞ்சலிக்கு வலி அதிகம் ஆகிறது. அதை கேட்டு வெண்பா சந்தோசப்படுகிறார். பின்னர் அஞ்சலி அம்மாவும் அப்பாவும் சௌந்தர்யா வீட்டிற்கு வருகின்றனர். அஞ்சலிக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்ய உள்ளதாக தெரிவிக்கின்றனர். அப்போது எங்க வீட்டில் நடத்தணும் என்று சொல்ல பாக்கியா விளக்கம் அளிக்கிறார். சௌந்தர்யா சரி என்று சம்மதம் தெரிவிக்கிறார்.

லட்சுமி தனியாக அமர்ந்து பாரதி பற்றி நினைத்து கவலைப்படுகிறார். முன்னதாக அவர் ஹேமாவையும் என்னையும் ஒரே மாதிரி பார்ப்பார் ஆனால் இப்போ அப்படி இல்லை என நினைக்கிறார். அம்மாவை பார்க்கணும் போல உள்ளது ஏன் இப்படி செய்கிறார் என நினைத்து வருத்தப்படுகிறார். கண்ணம்மா குமாரிடம் மாவு போட்ட கணக்கு வழக்குகளை பேசுகிறார். அப்போது ஹேமா பென்சில் சீவ வேண்டும் என சொல்ல குமார் அவரை கடைக்கு அழைத்து செல்கிறார். கண்ணம்மாவிற்கு பழைய மாதிரி மீண்டும் தலை சுற்றல் வருகிறது. உடனே கட்டாயம் மருத்துவமனை போக வேண்டும் என நினைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!