லட்சுமியை கூட்டிக் கொண்டு செல்ல வரும் கண்ணம்மா, அனுப்ப மறுக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
லட்சுமியை கூட்டிக் கொண்டு செல்ல வரும் கண்ணம்மா, அனுப்ப மறுக்கும் பாரதி - இன்றைய
லட்சுமியை கூட்டிக் கொண்டு செல்ல வரும் கண்ணம்மா, அனுப்ப மறுக்கும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
லட்சுமியை கூட்டிக் கொண்டு செல்ல வரும் கண்ணம்மா, அனுப்ப மறுக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா தான் லட்சுமியின் அம்மா என்ற உண்மையை தெரிந்துக் கொண்டு அதை அவரே ஒப்புக்கொள்ள வைக்க பேசுகிறார். சண்முகத்திற்கு லட்சுமி தான் கண்ணம்மாவின் மகள் என்ற உண்மை தெரிந்து சந்தோசப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், என்ன நடந்தது என்று தெரியாமல் சௌந்தர்யாவும், வேணுவும் கண்ணம்மாவிற்கு போன் செய்கின்றனர். ஸ்கூல்ல இருந்து போன் செஞ்சாங்க லட்சுமிக்கு வயிற்று வலி அவளை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கிறோம் என்று, ஆனால் அங்கே சென்று பார்த்தல் பாரதி தூக்கிக் கொண்டு போய்விட்டார் என்று சொன்னதாக கண்ணம்மா சொல்கிறார்.

லட்சுமி இப்போ எப்படி இருக்கா என்று கேட்டதற்கு நல்ல இருக்கா, பாரதிக்கு லேசா சந்தேகம் வந்துருச்சு போல அதான் அவன் இப்படி நடந்துக்குறான் என்று சௌந்தர்யா சொல்கிறார். பின்னர் சண்முகம் அங்கே வந்து சௌந்தர்யா வேணுவிடம் லட்சுமி தான் கண்ணம்மா பெத்த மகளா என்று கேட்டு அழுகிறார். ஆமாம் என்று உண்மையை சொல்ல சொந்த வீட்டிற்கு வர அவளுக்கு எவ்வளவு கஷ்டம் என்று அழுகிறார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,851 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

பின்னர் கண்ணம்மா அங்கே வர சௌந்தர்யா, வேணு சண்முகம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்று நிம்மதி அடைகிறார். அப்போது பாரதி அங்கே வர இவங்க யாரு எதுக்கு இங்கே வராங்க என்று கேட்கிறார். திறந்த வீட்டிற்குள் எதோ வந்த மாதிரி வராங்க என்று கேட்க, சண்முகம் கோபப்படுகிறார். உங்களுக்கே இந்த வீட்டிற்கு வர உரிமை இல்லை என்று கேட்க சௌந்தர்யா கோபப்படுகிறார்.

அவர் கண்ணம்மாவிற்கு மட்டுமல்ல அஞ்சலிக்கும் அப்பா தான், அகிலன் மாமனாருக்கு இங்கே வர எல்லா உரிமையும் இருக்கு என்று சொல்கிறார். கண்ணம்மா நான் லட்சுமியை கூட்டிக் கொண்டு போக வந்திருக்கேன் என்று சொல்ல, பாரதி லட்சுமியின் அம்மா அப்பா வரட்டும் நான் அனுப்புகிறேன். அவளுக்கு உடம்பு சரி ஆகும் வரை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.

ENG Vs IND: இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா அபார வெற்றி – லார்ட்ஸில் புதிய சாதனை!

உங்க பொண்ணு ஹேமாவை பார்த்துக் கொள்ள முடியாமல் தான் என்னிடம் விட்டீங்க இப்போ இவளை எப்படி பார்த்துக் கொள்ள போகிறீர்கள் என்று கண்ணம்மா கேட்க, நான் அப்பவே சொன்னேன் ஹேமாவை அங்கே விட வேண்டாம் என்று என பாரதி குடும்பத்தினரிடம் சொல்கிறார். உடனே தூங்கி எழுந்து லட்சுமி அங்கே வருகிறார். அனைவரும் நிற்பதை பார்த்து லட்சுமி சிரிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!