லட்சுமியை ஸ்கூலில் இருந்து ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்லும் பாரதி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா வீட்டில் இருந்து கிளம்பியதை சௌந்தர்யா தெரிந்து கொள்கிறார். பாரதி கண்ணம்மா வீட்டில் தங்கியதற்கு வெண்பா சாந்தியை கட்டிவைத்து அடிக்கிறார். பின்னர் பாரதி ஹேமாவை மீண்டும் ஸ்கூலில் சேர்க்க சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி நீண்ட நேரம் ஆகி வரவில்லை என சௌந்தர்யா புலம்பிக் கொண்டிருக்கிறார். கண்ணம்மாவிடம் போன் செய்து பேச அவர் ஏற்கனவே கிளம்பிவிட்டார் எனவும், கொரோனா நெகடிவ் வந்துவிட்டது அதான் கிளம்பிட்டார் என்று சொல்கிறார். இரவு கிளம்பினார் குழந்தைகள் தான் தங்க வைத்தார்கள் என்று கண்ணம்மா சொல்கிறார்.
சௌந்தர்யா பாரதி வந்ததும் அவரை கலாய்க்க வேண்டும் என காத்திருக்கிறார். அப்போது பாரதி அங்கே வர எங்கே போன என்று கேட்கிறார். நண்பன் வீட்டில் தங்குனேன் என்று சொல்ல, யார் அந்த நண்பன் என்று கேட்கிறார். உடனே கண்ணம்மா தான் எல்லாமே சொல்லிருப்பாளே, நான் கண்ணம்மா வீட்டில் தான் தங்குனேன். அங்கே கொரோனா கட்டுப்பாடு பகுதியாக அறிவிச்சிட்டாங்க அதான் என்னால் வெளியே வர முடியவில்லை என்று தெரிவிக்கிறார்.
தமிழகத்திற்கு மேலும் 3,60,000 டோஸ் கோவிஷீல்டு வருகை – மத்திய அரசு ஒதுக்கீடு!
கண்ணம்மா லுங்கி வாங்கி தந்ததை காட்டுகிறார். நம்ம பையன் லுங்கிலாம் போடுறான் என்று சௌந்தர்யாவும் வேணுவும் கிண்டல் செய்கின்றனர். அதன் பின்னர் வெண்பா பாரதியை நினைத்து பித்து பிடித்தது போல் இருக்கிறார். சாந்தியை கட்டிவைத்து அடிக்கிறார். பின்னர் சாந்தி உன்னை யார் கட்டி போட்ட என்று குழப்பத்தில் இருக்கிறார்.
ஹேமா ஆட்டோ ஒட்டி பழக வேண்டும் என கண்ணம்மாவிடம் கேட்க, நீ என்ன மாதிரியே இருக்க ஹேமா, லட்சுமி அவங்க பாட்டி மாதிரியே இருக்க என்று நினைத்து கொள்கிறார். லட்சுமி அப்பா பத்தி ஹேமா கேட்க அவரை ஆட்டோ ஓட்ட அழைத்து செல்கிறார். ஹேமா சந்தோசமாக ஆட்டோ ஓடுகிறார். பாரதி ஹேமாவை மீண்டும் ஸ்கூலில் சேர்க்க ஸ்கூலுக்கு செல்கிறார்.
2021 நீட் தேர்வுக்கு தமிழகத்தில் 11,236 மாணவர்கள் விண்ணப்பம் – தமிழக அரசு தகவல்!
அங்கே லட்சுமிக்கு வயிறு வலி காரணமாக அழுது கொண்டிருக்கிறார். லட்சுமியின் ஆசிரியர் தண்ணீர் கொடுத்தும் வலி சரியாகவில்லை. அங்கே பாரதி வர அவர் டாக்டர் தானா என்று ஆசிரியர் அழைக்கிறார். பாரதி லட்சுமியை பார்த்து என்னாச்சு என்று கேட்க வயிற்று வலி என்று சொல்கிறார். உடனே பாரதி அவளை அழைத்துக்கொண்டு காரில் கிளம்புகிறார்.