வெண்பாவிடம் பெண் பார்க்க வருவதாக சொல்லும் ஷர்மிளா, கண்ணம்மாவை பார்க்க வந்த ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
வெண்பாவிடம் பெண் பார்க்க வருவதாக சொல்லும் ஷர்மிளா, கண்ணம்மாவை பார்க்க வந்த ஹேமா - இன்றைய
வெண்பாவிடம் பெண் பார்க்க வருவதாக சொல்லும் ஷர்மிளா, கண்ணம்மாவை பார்க்க வந்த ஹேமா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
வெண்பாவிடம் பெண் பார்க்க வருவதாக சொல்லும் ஷர்மிளா, கண்ணம்மாவை பார்க்க வந்த ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவை நீதிமன்றம் விடுதலை செய்கிறது. பின் ஷர்மிளாவிடம் வந்து சந்தோசப்பட நாளைக்கே உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். பின் பாரதி சக்தி குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்கிறார். பின் ஹேமா லட்சுமி விக்ரம் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா மீது எந்த தவறும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதனால் சந்தோசப்பட்ட வெண்பா ஷர்மிளாவிடம் வந்து நான் நினைத்து கூட பார்க்கவில்லை என சொல்கிறார். இத்தனை ஆண்டுகளுக்கு பின் வந்து சரியான வக்கீலை வைத்து என்னை வெளியே கொண்டு வந்து இருக்கிறாய் என ஷர்மிளாவிற்கு முத்தமழை பொழிகிறார் அப்போது ஷர்மிளா நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கட்டும் நாளைக்கே உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என சொல்கிறார். அதை கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைய ஆனால் நான் பாரதியை மறக்க மாட்டேன் என வெண்பா நினைக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் சக்தி மருத்துவமனையில் குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருக்கிறார். அப்போது சக்தி அம்மா போதும் விளையாடியது உடம்பு சரியில்லாமல் போய்விடும் என கூப்பிட ஆனால் சக்தி நான் சிறிது நேரம் விளையாடிவிட்டு வருகிறேன் என சொல்கிறார். அப்போது பாரதி கூப்பிட அம்மா அப்பா பாரதியை பார்க்க செல்கிறார்கள். பாரதி சக்திக்கு இதயம் பலவீனமாக இருப்பதாக சொல்கிறார். உடனே இதய மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனவும் இல்லையென்றால் சக்தி உயிருக்கு ஆபத்து என சொல்கிறார். அதை கேட்டு சக்தியின் பெற்றோர் வருத்தப்பட்டு அழுகின்றனர்.

பின் செலவு எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என பாரதி சொல்கிறார். பின் பாரதி எல்லா மருத்துவர்களையும் அழைத்து சக்தி நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. அதற்கு ஒரே வழி குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது தான் எல்லாரும் சக்திக்கு பொருத்தமான டோனரை தேடுங்கள் எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவளோ சீக்கரம் முடிக்க வேண்டும் என சொல்கிறார். பின் சௌந்தர்யா லட்சுமி ஹேமாவை அழைத்து கொண்டு கண்ணம்மாவை பார்க்க வருகின்றனர். அப்போது லட்சுமியிடம் சௌந்தர்யா இது தான் உன் அம்மா வேலை செய்யும் மருத்துவமனை என காட்டுகிறார்.

TNPSC Group 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்னும் 2 நாட்களே கால அவகாசம்!

இவ்வளவு பெரிதாக இருக்கிறது என சொல்ல, ஆமாம் பெரியது தான் இங்கே உன் அம்மா தான் எல்லா வேலையும் பார்ப்பார்கள் என சொல்கிறார். அதை கேட்டு லட்சுமி சந்தோசப்பட கண்ணம்மா வேலை பார்ப்பதை சௌந்தர்யா காட்டுகிறார். பின் லட்சுமி அம்மா என கூப்பிட்டு கண்ணம்மாவை கட்டி அணைத்து கொள்கிறார். பின் ஹேமாவை பார்த்த கண்ணம்மா நீ என்ன இவர்களுடன் என கேட்கிறார். உடனே ஹேமா அழ தொடங்க என்னிடம் சொல்லாமல் வந்துடீங்க என்னை மறந்துவிட்டீர்கள், லக்ஷ்மியை மட்டும் வர சொல்லி இருக்கீங்க என சொல்லி அழுகிறார்.

உடனே கண்ணம்மா அப்படி இல்லை ஹேமா நீயும் இனிமேல் லட்சுமி உடன் வரலாம் என சொல்கிறார். அப்போது விக்ரம் வர இது தான் உங்க பொண்ணா என கேட்கிறார். பின் கண்ணம்மா ஹேமாவை காட்டி இது என் பொண்ணு என சொல்ல வர ஆனால் சொல்லாமல் இருக்கிறார். பின் சௌந்தர்யா இது பாரதி பொண்ணு என சொல்கிறார். விக்ரம் சரி சரி என சொல்ல நாங்க இனிமேல் இங்கே தான் படிப்போம் என லட்சுமி சொல்கிறார் ஆனால் விக்ரம் முடியாது என்பது போல சொல்லிவிட்டு பின் சரி என சொல்கிறார். அதை கேட்டு குழந்தைகள் சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் வெண்பா அம்மா வெண்பாவை பயங்கரமாக திட்டுகிறார். அந்த பாரதி நீ ஜெயிலில் இருக்கும் போது கூட பார்க்க வரவில்லை அவனுக்காக உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய் நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கட்டும் என சொல்கிறார். வெண்பாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!