வெண்பாவை பார்க்க சென்ற ஷர்மிளா, திருமணம் செய்ய வேண்டும் என கண்டிஷன் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
வெண்பாவை பார்க்க சென்ற ஷர்மிளா, திருமணம் செய்ய வேண்டும் என கண்டிஷன் - இன்றைய
வெண்பாவை பார்க்க சென்ற ஷர்மிளா, திருமணம் செய்ய வேண்டும் என கண்டிஷன் - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
வெண்பாவை பார்க்க சென்ற ஷர்மிளா, திருமணம் செய்ய வேண்டும் என கண்டிஷன் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவை பார்க்க ஷர்மிளா ஜெயிலுக்கு போகிறார். என்னை வெளியே கொண்டு வாங்க என வெண்பா கெஞ்ச ஆனால் நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்தால் தான் வருவேன் என ஷர்மிளா சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா திறப்பு விழா பற்றி அகில் அஞ்சலியிடம் சொல்கிறார். பின் வெண்பாவை போலீசார் கைது செய்தது பற்றி சௌந்தர்யா சொல்கிறார். அப்போது ஹேமா சோகமாக வர என்ன சௌந்தர்யா ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்கிறார். அப்போது ஹேமா நான் இனிமேல் ஸ்கூலிற்கு போக மாட்டேன் என சொல்ல சௌந்தர்யா என்ன ஆனது என கேட்கிறார். ஹேமா இனிமேல் ஸ்கூலிற்கு சமையல் அம்மா சாப்பாடு கொண்டு வரமாட்டாங்களாம் இன்னைக்கு கூட குமார் அங்கிள் தான் சாப்பாடு கொண்டு வந்ததாக சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அவங்க வேறு வேலைக்கு போனதாக சொல்கிறார்கள் சமையல் அம்மாவை பார்க்காமல் எனக்கு பிடிக்கவில்லை என ஹேமா சொல்கிறார். அப்போது சௌந்தர்யா இப்படி எல்லாம் பேச கூடாது அவங்களுக்கு எதாவது வேலை இருக்கும் நீ லட்சுமி உடன் அவர்களது வீட்டிற்கு சென்று வா ஆனால் ஸ்கூல் போகமாட்டேன் என சொன்னால் அதை நினைத்து அவரே வருத்தப்படுவார் என சொல்கிறார். பின் ஹேமா சரி என கிளம்ப சௌந்தர்யா நாம குழந்தையும் அம்மாவையும் பிரித்துவைக்க ஆனால் பெற்ற பாசம் அவர்களை பிரியவிடாமல் செய்கிறது என சொல்கிறார்.

பின் ஷர்மிளா வெண்பாவை பார்க்க ஜெயிலுக்கு வருகிறார். அப்போது வெண்பா சௌந்தர்யாவிடம் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என சொல்ல, நீ செய்ததில் எதாவது நியாயம் இருக்கிறதா என ஷர்மிளா கேட்கிறார். அப்போது வெண்பா எதோ தெரியாமல் செய்துவிட்டேன் என்னுடைய கேஸ் நாளைக்கு நீதிமன்றம் வருகிறது அதில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என வெண்பா கெஞ்சுகிறார். அப்போது ஷர்மிளா நான் உன்னை காப்பாற்றுகிறேன். ஆனால் ஒரு கண்டிஷன் என சொல்கிறார். அப்போது வெண்பா என்ன என கேட்க, நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.

TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்திருப்போர் கவனத்திற்கு – சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

நான் 10 வருசமாக பாரதிக்காக காத்திருக்கிறேன் அவனை தான் திருமணம் செய்வேன் என நீ சொல்ல கூடாது என சொல்கிறார். பாரதியே உன்னை தேடி வந்தாலும் அவனை நீ திருமணம் செய்ய கூடாது என ஷர்மிளா சொல்கிறார். அப்போது வெண்பா எனக்கு பாரதி தான் முக்கியம் என சொல்ல அப்போ உன்னை நான் கேஸ்ஸில் இருந்து வெளியே கொண்டு வரமாட்டேன் என சொல்கிறார். நீ பிடிவாதக்காரி என்றால் நான் அகம்பாவக்காரி என சொல்கிறார். இன்னைக்கு ஒரு நாள் நன்றாக யோசித்து சொல் அந்த முடிவு நான் எதிர்பார்த்த முடிவாக இருக்க வேண்டும் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா எப்படி வேலைக்கு வந்தால் அம்மா அப்பா சொன்னதால் தான் அவளை வேலைக்கு வைத்திருப்பாரா என நினைத்துக் கொண்டிருக்க அப்போது விக்ரம் வருகிறார். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறதா என கேட்க எல்லாம் நல்லபடியாகஇருக்கிறது என பாரதி சொல்கிறார். உனக்கு எதாவது குறை இருக்கிறதா என கேட்க இந்த மருத்துவமனையில் எல்லாம்சரியாக இருக்கிறது. ஆனால் அட்மின் ஆபிசர் மட்டும் ஏன் இப்படி எதுவும் தெரியாதவர்களாக இருக்கிறார். இது சாதாரண விஷயம் இல்லை என பாரதி சொல்ல, கண்ணம்மாவை சொல்கிறாயா என விக்ரம் கேட்கிறார்.

நான் யார் சொல்லியும் கேட்டு இதை செய்யவில்லை, ஒரு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவராக நல்ல வயதானவர்களை தான் நியமிப்பார்கள். ஆனால் நான் உன்னை தான் தேர்வு செய்தேன் அந்த அளவிற்கு உன்னை நான் நம்புகிறேன். அது போல தான் கண்ணம்மாவை நம்புகிறேன் அவங்க தன்னுடைய வேலையை பிடித்து செய்கிறார். அவர்களால் நல்ல மாற்றம் வரும் என்பதை நான் நம்புகிறேன் என சொல்லிவிட்டு விக்ரம் கிளம்புகிறார். இது மருத்துவமனை பல உயிர்கள் சம்மந்தப்பட்ட விஷயம் என்ன இப்படி பேசுகிறார் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!