
கண்ணம்மாவை வேலைக்கு சேர்த்ததால் விக்ரமிடம் நன்றி சொன்ன சௌந்தர்யா, வெண்பாவை கைது செய்த போலீசார் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா கண்ணம்மாவை பார்த்து சமையல் அம்மாவிற்கு ஹாஸ்பிடலில் என்ன வேலை என கேட்க உடனே வெண்பாவை கண்ணம்மா அவமானப்படுத்துகிறார். பின் வெண்பாவை போலீஸ் பைல் முடிந்துவிட்டது என அழைத்து செல்கின்றனர்.
பாரதி கண்ணம்மா :
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வேலைகளை செய்து கொண்டிருக்க அப்போது வெண்பா அதை பார்த்துவிட்டு வருகிறார். சமையல் அம்மா வேலை செய்து கொண்டிருந்தவர் தற்போது இவ்வளவு பெரிய மருத்துவமனைக்கு அட்மினா என கேட்டு கடவுளை கிண்டல் செய்கிறார். பின் கண்ணம்மா என்ன சொல்ல வரீங்க என கேட்க இந்த மருத்துவமனையில் உள்ள மருந்து ஊசி எல்லாத்துக்கும் உனக்கு சம்மதம் இருக்கிறதா என கேட்கிறார். அதற்கு கண்ணம்மா ஆமாம் இல்லை ஆனால் நீ ஒன்றை மறந்துவிட்டாய் நீ இப்போது மருத்துவம் பார்க்காத டாக்டர் என சொல்கிறார்.
TN Job “FB
Group” Join Now
பின் வெண்பா எதோ வேலை கிடைத்துவிட்டது என திமிரில் பேசாதே என சொல்கிறார். யாரையும் நம்பி இருக்காத எனக்கு திமிரு இருக்க தான செய்யும் என சொல்கிறார். பின் கண்ணம்மா வெண்பாவிடம் சண்டை போடுவதை பார்த்து ஷர்மிளா சந்தேகப்படுகிறார். இருவரும் ரொம்ப வருஷம் பழக்கம் மாதிரி பேசிக் கொள்கிறார்களே என பார்க்க, கண்ணம்மா நான் வாழுறதை பார்த்து சாக தான போற என சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின் வெண்பாவை பார்த்து ஷர்மிளா வருகிறார் . அந்த மாவுக்காரியிடம் என்ன பேச்சு என கேட்க, வெண்பா பொய் சொல்கிறார். நான் உன்னுடைய அம்மா நீ எப்போது பொய் பேசுவ என எனக்கு தெரியும் நீ இப்போ பொய் சொல்கிறாய் என சொல்கிறார்.
சொல்லு என்ன பேசிக் கொண்டிருந்தாய் என கேட்க, நீங்க இருவரும் பல வருஷம் பகையில் இருப்பது போல இருக்கிறதே என கேட்கிறார். வெண்பா அவ தான் கண்ணம்மா என சொல்ல இந்த பெயரை எங்கையோ கேள்விப்பட்டு இருக்கிறேனே என கேட்க பாரதி மனைவி கண்ணம்மாவா என கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இவளுடன் இத்தனை ஆண்டுகள் பாரதிக்காக காத்திருந்தாய் என கேட்டு அப்படி அவனிடம் என்ன தான் இருக்கிறது என கேட்கிறார். நீ வீட்டிற்கு வா உனக்கு நிறைய சொல்லி கொடுக்க வேண்டி இருக்கிறது என ஷர்மிளா சொல்கிறார். மறுபக்கம் விக்ரம் மருத்துவமனை நல்ல படியாக திறக்கப்பட்டுள்ளது என சொல்ல வேணு கண்ணம்மாவை வேலைக்கு வைத்ததை நினைத்து சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார்.
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நேர்காணலுக்கு அழைப்பு!
பின் விக்ரம் உங்களுக்காக அவளை தேர்வு செய்யவில்லை. அவளுடைய திறமைக்காக தான் தேர்வு செய்தேன். இன்டெர்வியூவில் அவரிடம் பேசி தான் வேலைக்கு தேர்வு செய்தேன் உங்களுக்காக இல்லை என சொல்கிறார். பின் நாங்க சொன்னது கண்ணம்மாவிற்கு தெரியாது என சொல்ல, பாரதி என்ன சொன்னார் கண்ணம்மாவை சேர்த்து கொண்டதற்கு என கேட்க அதெல்லாம் அவன் போவதாக சொன்னான் ஆனால் உன் மீது வைத்துள்ள மரியாதையால் தான் பாரதி என சொன்னதாக சொல்கிறார். பாரதி கண்ணம்மா இனி ஒன்றாக இருக்க போகிறார்கள் அதனால் எதாவது மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம் என சொல்கிறார்.
அனைவரும் குரூப் போட்டோ எடுக்க செல்ல அப்போது கண்ணம்மா ஒதுங்கி நிற்கிறார். உடனே விக்ரம் கண்ணம்மாவை அழைத்து நிற்க சொல்கிறார். பின் கண்ணம்மாவை பாரதி அருகே நிற்க வைத்து போட்டோ எடுக்கின்றனர். அதை ஷர்மிளா வெண்பா பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். ஷர்மிளா என்னமோ அவர்கள் பிரிய போறாங்க என சொன்னாய் ஆனால் இப்போது இருவரும் ஒன்றாக இருக்காங்க என சொல்கிறார். இவனை நம்பி இத்தனை வருடம் ஏமாந்து இருக்கியே என சொல்கிறார்.
பின் போலீஸ் வந்து வெண்பாவை அழைத்து செல்ல, என்னாச்சு என எல்லாரும் கேட்கின்றனர். அப்போது வெண்பா நான் டாக்டர் சமூகத்தில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது என சொல்கிறார். பின் ஷர்மிளா என்ன பிரச்சனை என போலீசிடம் கேட்க இவங்க பெயிலில் வந்து இருக்காங்க ஆனால் அவங்க கையெழுத்து போடாமல் இருந்ததால் பைல் கேன்சல் ஆகிவிட்டது என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார். ஷர்மிளா சைன் போடாமல் இருந்தால் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என சத்தம் போடுகிறார். வெண்பாவை போலீசார் அழைத்து செல்கின்றனர்.