சௌந்தர்யா கையால் திறக்கப்பட்ட புது மருத்துவமனை, அட்மினாக வந்த கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
சௌந்தர்யா கையால் திறக்கப்பட்ட புது மருத்துவமனை, அட்மினாக வந்த கண்ணம்மா - இன்றைய
சௌந்தர்யா கையால் திறக்கப்பட்ட புது மருத்துவமனை, அட்மினாக வந்த கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
சௌந்தர்யா கையால் திறக்கப்பட்ட புது மருத்துவமனை, அட்மினாக வந்த கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி வேணு சௌந்தர்யாவை மேடையில் அமர வைத்து விக்ரம் இந்த மருத்துவமனையின் சிறப்பம்சத்தை பற்றி பேசுகிறார். பின் சௌந்தர்யா கையால் மருத்துவமனையை திறந்து வைக்க அங்கே அட்மினாக கண்ணம்மா வருகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் மருத்துவமனை திறப்பு விழா பிரமாண்டமாக தொடங்கப்படுகிறது. முதலில் பேசிய பெண் விக்ரம் பற்றி பெருமையாக பேசுகிறார். நமது நாட்டில் பலர் படித்துவிட்டு வேலை செய்ய வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால் விக்ரம் வெளிநாட்டில் இருந்து சேவை செய்வதற்காகவே இங்கே வந்திருப்பதாக சொல்கிறார். பின் பாரதி பற்றி பேசிய அவர் 100க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச படிப்பை இலவசமாக கொடுத்து வருகிறார். விளம்பரத்திற்காக பலர் வேலை செய்ய ஆனால் பாரதி அப்படி எல்லாம் இல்லாமல் பல நல்லதுகளை செய்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

இருவரையும் அழைக்க மிகவும் சந்தோசப்படுவதாக சொல்கிறார். பின் பேசிய விக்ரம் இந்த ஊரில் நிறைய மருத்துவமனை இருக்கிறது. ஆனால் இது அது போல இல்லை ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதை தான் நோக்கமாக வைத்திருக்கிறோம். ஏழைகளுக்கு சிறப்பு தள்ளுபடி உண்டு மாலை 5 மணிக்கு மேல் வருபவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என சொல்கிறார். பின் பாரதி பற்றி சொன்ன அவர் சௌந்தர்யா வேணு பற்றி பேச அவர்கள் தான் மருத்துவமனையை திறந்து வைக்க போகிறார்கள்.

அவர்களது மகன் தான் டாக்டர் பாரதி அவரை பற்றி உங்களுக்கு தெரியும் அவர் போன வாரம் தான் சிறந்த மனிதநேய மருத்துவர் விருது வாங்கி இருக்கிறார் என சொல்ல சௌந்தர்யாவை அழைக்க அவர் இத்தனை பெரியவர்கள் இருக்கிறார்கள் அவர்களை வைத்து திறக்கலாம் என சொல்கிறார். ஆனால் விக்ரம் சௌந்தர்யாவை தான் திறக்க சொல்ல ரிமோட் காணாமல் தேடுகின்றனர். அட்மினிடம் இருப்பதாக சொல்ல கண்ணம்மா அட்மினாக வருகிறார். அவரை பார்த்து சௌந்தர்யா சந்தோசப்படுகிறார். பாரதி அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!

பின் சௌந்தர்யா மருத்துவமனையை திறந்து வைக்கிறார். பின் சௌந்தர்யா திறப்பு விழா பற்றி பேசிக் கொண்டிருக்க பாரதி வந்து எல்லாம் உங்க ட்ராமா தான என கேட்கிறார். சௌந்தர்யா என்ன சொல்கிறாய் என கேட்க அப்போது பாரதி கண்ணம்மா எப்படி இங்கே வந்தால் என கேட்கிறார். அவளுக்கு மருத்துவமனைக்கும் எப்படி சம்மந்தம் வந்தது. அவளுக்கு இந்த துறை பற்றி என்ன தெரியும் என கேட்கிறார். எதுவும் தெரியாமல் எப்படி வேலைக்கு சேர்ந்தால் என கேட்க எங்களுக்கு தெரியாது என சௌந்தர்யா சொல்கிறார்.

இதெல்லாம் எதிர்ச்சியாக நடந்தது என வேணு சொல்ல, சரி அவள் இங்கையே வேலை பார்க்கட்டும் ஆனால் நான் இனிமேல் இங்கே வேலை செய்யமாட்டேன் என பாரதி சொல்கிறார். அவளை பார்த்துவிட்டு தினமும் என்னால் வேலை செய்ய முடியாது என பாரதி சொல்ல அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கண்ணம்மா பார்த்துவிடுகிறார். விக்ரம் உன் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் அதை நீ ஏமாற்றாதே என சௌந்தர்யா சொல்ல பாரதி முடியாது என பிடிவாதமாக இருக்கிறார்.

பின் விக்ரம் சுகதர்துறை அமைச்சருடன் வருகிறார். அவர் பாரதியை அறிமுகம் செய்து வைக்க போன வாரம் உங்களுக்கு விருது கிடைத்ததே அது நான் பரிந்துரை செய்தது தான் என சொல்கிறார். பின் எத்தனையோ பேர் விளம்பரம் செய்து சேவை செய்கிறார், அதில் நீங்கள் விளம்பரம் இல்லாமல் செய்யும் சேவைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதால் நான் இதை செய்தேன் என சொல்ல இனிமேல் மாதம் மாதம் டாக்டர் பாரதியிடம் தான் நான் செக்கப் போவேன் என அமைச்சர் சொல்கிறார். அதை கேட்டு பாரதி என்ன சொல்வார் என சௌந்தர்யா பதட்டத்துடன் இருக்க பாரதி சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு சௌந்தர்யாவும் கண்ணம்மாவும் சந்தோசப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!