சிறந்த மனிதநேய விருது பெற்ற பாரதி, குழந்தைகளை மேடைக்கு அழைத்து மரியாதை – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
சிறந்த மனிதநேய விருது பெற்ற பாரதி, குழந்தைகளை மேடைக்கு அழைத்து மரியாதை - இன்றைய
சிறந்த மனிதநேய விருது பெற்ற பாரதி, குழந்தைகளை மேடைக்கு அழைத்து மரியாதை - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
சிறந்த மனிதநேய விருது பெற்ற பாரதி, குழந்தைகளை மேடைக்கு அழைத்து மரியாதை – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதிக்கு விருது கொடுப்பதை நினைத்து லட்சுமி மிகவும் சந்தோசமாக இருக்கிறார். சௌந்தர்யா அழைப்பின் படி கண்ணம்மாவும் லக்ஷ்மியும் பாரதி விருது வாங்குவதை பார்க்க செல்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதிக்கு விருது கிடைக்க இருப்பதால் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு லக்ஷ்மியும் கண்ணம்மாவும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது வடிவு வர டாக்டர் அப்பாவிற்கு நல்ல மனிதர் என்ற விருது கொடுக்கப்போறதாக சொல்கிறார். நான் சொன்னேன்ல டாக்டர் அப்பா மிகவும் நல்லவர் என சொல்ல, வடிவு அதை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் லட்சுமி ரோட்டில் போகும் அனைவரிடமும் சொல்லி சந்தோசப்படுகிறார். கண்ணம்மாவிற்கு லக்ஷ்மியை எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல் இருக்க லட்சுமி நான் அப்படி தான் செய்வேன் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் வடிவு லட்சுமி இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாள் என கேட்க மனிதநேயத்திற்காக விருது கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்ததும் அவருக்கு வாழ்த்து சொல்ல லட்சுமி அழைத்து சென்றதாக சொல்கிறார். அப்போது நீ வாழ்த்து சொன்னியா என வடிவு கேக்க சொன்னேன் என கண்ணம்மா சொல்கிறார். அப்போது சௌந்தர்யா போன் செய்து நாளை பாரதிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நீயும் வர வேண்டும் என சொல்கிறார். கண்ணம்மா அதெல்லாம் வேண்டாம் என சொல்ல ஆனால் சௌந்தர்யா கட்டாயம் வர வேண்டும் என சொல்கிறார்.

மறுநாள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் எல்லாரும் அமர்ந்திருக்க அங்கே கண்ணம்மா வருவதை பார்த்து பாரதி அதிர்ச்சி அடைகிறார். அப்போது சௌந்தர்யா அவர்கள் என்னுடைய விருந்தாளி என சொல்ல பாரதி எதுவும் பேசாமல் இருக்கிறார். லக்ஷ்மியை பார்த்து பாரதி சந்தோசமாக வரவேற்க கண்ணம்மா வாழ்த்து சொல்கிறார். அதை கேட்டு சௌந்தர்யா சந்தோசப்படுகிறார். பின் பாரதியை மேடைக்கு அழைத்து கவுரவிக்கின்றனர். பின் பேசிய பாரதி எல்லாருக்கும் இலவச மருத்துவம் சென்றடைய வேண்டும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என எனக்கு சொல்லி கொடுத்தது என் அம்மா அப்பா என சொல்லி பெருமையாக பேசுகிறார்.

தமிழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

இன்னும் ஒருவர் இருப்பதாக சொல்ல சௌந்தர்யா யாரை சொல்ல போகிறான் என தெரியாமல் இருக்கிறார். அப்போது ஹேமாவை பாரதி அழைக்க ஹேமா லட்சுமி வந்தால் தான் வருவேன் என சொல்கிறார். உடனே பாரதி லக்ஷ்மியை கூட அழைத்து இரு குழந்தைகளுக்கு அந்த விருதை கொடுக்கிறார். சௌந்தர்யா கண்ணம்மா எல்லாரும் பார்த்து சந்தோசப்படுகின்றனர். பின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இது போல எண்ணம் வர வேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்தேன் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here