பாரதிக்கு வாழ்த்து சொல்ல வந்த லட்சுமி கண்ணம்மா, வெண்பாவை சாப்பிடவிடாமல் தடுக்கும் ஷர்மிளா – இன்றைய எபிசோட்!

0
பாரதிக்கு வாழ்த்து சொல்ல வந்த லட்சுமி கண்ணம்மா, வெண்பாவை சாப்பிடவிடாமல் தடுக்கும் ஷர்மிளா - இன்றைய எபிசோட்!
பாரதிக்கு வாழ்த்து சொல்ல வந்த லட்சுமி கண்ணம்மா, வெண்பாவை சாப்பிடவிடாமல் தடுக்கும் ஷர்மிளா - இன்றைய எபிசோட்!
பாரதிக்கு வாழ்த்து சொல்ல வந்த லட்சுமி கண்ணம்மா, வெண்பாவை சாப்பிடவிடாமல் தடுக்கும் ஷர்மிளா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா ஷர்மிளாவிடம் பாரதி திருமணம் செய்ய சம்மதித்துவிட்டதாக பொய் சொல்கிறார். பின் பாரதிக்கு விருது கிடைத்ததால் லட்சுமி பாரதிக்கு வாழ்த்து சொல்ல மருத்துவமனைக்கு கண்ணம்மா உடன் வருகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவிடம் பாரதி என்ன சொன்னார் என கேட்க, அவன் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சொன்னதாக சொல்கிறார். பின் உங்க அம்மாவிடம் சாரி சொல்ல சொன்னதாக சொன்னான் நேற்று டென்ஷனில் பேசிட்டானாம் அதனால் ரொம்ப வருத்தப்பட்டான் என சொல்கிறார். அம்மா கோவப்பட்டால் நான் மிகவும் வருத்தப்பட்டேன் என சொல்ல சொன்னான். பாரதியின் விவாகரத்து கேஸ் சென்று கொண்டிருக்கிறது. விவாகரத்து கிடைத்து அடுத்த நாளே கல்யாணத்தை பற்றி பேசுகிறேன் என சொன்னான்.

TN Job “FB  Group” Join Now

கண்ணம்மா இருக்காள பாரதியின் மனைவி என சொல்ல, ஷர்மிளா பெயர் நல்லாவே இல்லையே வயசான பெண்ணா என கேட்க இல்லை என் வயது தான் என சொல்கிறார். பின் கண்ணம்மாவிற்கு நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பது தெரிந்தால் பின் விவாகரத்து கொடுக்கமாட்டாள் என சொல்கிறார். பின் ஷர்மிளா வெண்பாவை பார்த்து சிரிக்க நான் உனக்கு அம்மா என் காதில் பூ சுத்துகிறாய் என கேட்கிறார். நீ எப்போ எப்படி பேசுவாய் என எல்லாம் எனக்கு தெரியும் என சொல்ல, பாரதி உன்னை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டால் நீ இப்படி இருக்கமாட்டாய் மிகவும் சந்தோஷமாக ஓடி வந்து சொல்லிருப்பாய் என சொல்கிறார். எல்லாம் சரியாக சொன்னதை நினைத்து வெண்பா கடுப்பாகிக்கிறார்.

பின் லட்சுமி கண்ணம்மா ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது பாரதிக்கு விருது கிடைத்துள்ளதாக லட்சுமி போஸ்டர் பார்க்கிறார். பின் கண்ணம்மாவிடம் இதுல என்ன விருது போட்டிருக்காங்க என கேட்க, அது மனித நேய மருத்துவ விருது அதாவது எல்லார் மீதும் பாசமாக இருப்பதால் இந்த விருது கொடுப்பாங்க என சொல்கிறார். லட்சுமி அதை நினைத்து சந்தோசப்பட குமாரை டாக்டர் அப்பாவை பார்க்க போக சொல்கிறார். அங்கே லட்சுமி போக பாரதிக்கு எல்லாரும் வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். அப்போது பாரதி லக்ஷ்மியை பார்த்து கூப்பிட லட்சுமி வாழ்த்து சொல்ல வந்ததாக சொல்கிறார். அப்போது பாரதிக்கு லட்சுமி வாங்கி கொண்டு வந்த பூவை கொடுக்கிறார்.

Post Office இல் ரூ.16 லட்சம் வரை ரிட்டன்ஸ் கிடைக்கும் சூப்பர் சேமிப்பு திட்டம் – முழு விபரங்கள் இதோ!

காசு கொடுத்து வாங்கி கொண்டு வந்த பூவை விட நீ பறித்து கொண்டு வந்தது தான் எனக்கு பெஸ்ட் என சொல்கிறார். பின் லட்சுமி கண்ணம்மாவை அழைக்க கண்ணம்மா வரமாட்டேன் என சொல்கிறார். பின் கண்ணம்மா வந்து வாழ்த்து சொல்ல பாரதி நன்றி என சொல்கிறார். பின் லட்சுமி பாரதி சொன்னதை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் வெண்பா பாரதி பேசியதை நினைத்து கோவமாக இருக்கிறார். சாந்தி அவருக்கு சமாதானம் செய்ய பின் வெண்பா சாப்பிட வர என் கோவத்தை தடுக்க எல்லாத்தையும் சாப்பிட போகிறேன் என சொல்கிறார். ஆனால் ஷர்மிளா வெண்பாவை சாப்பிடவிடாமல் செய்கிறார். இரவு நேரத்தில் இதெல்லாம் சாப்பிட கூடாது உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். அம்மா உனக்கு நல்ல உணவு செய்து வைத்திருக்கேன் என சொல்ல, வெண்பாவிற்கு பச்சை காய்கறிகளை கொடுக்கிறார். 10 கிலோ நீ உடம்பை குறைக்க வேண்டும் என ஷர்மிளா சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!