லட்சுமி உயிரை காப்பாற்றிய பாரதி, நடந்ததை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

0
லட்சுமி உயிரை காப்பாற்றிய பாரதி, நடந்ததை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
லட்சுமி உயிரை காப்பாற்றிய பாரதி, நடந்ததை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
லட்சுமி உயிரை காப்பாற்றிய பாரதி, நடந்ததை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி தண்ணீரில் மூழ்கி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கத்த பாரதி விஷயம் தெரிந்து வேகமாக வந்து லக்ஷ்மியை காப்பாற்றுகிறார். பின் கண்ணம்மா லக்ஷ்மியை தவிர எனக்கு உறவு இல்லை என சொல்லி வருத்தப்பட அவருக்கு பாரதி ஆதரவாக பேசுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி தீம் பார்க்கில் விளையாடி கொண்டிருக்க தண்ணீரில் ஆழமான இடத்திற்கு சென்றுவிடுகிறார். அப்போது அவரால் மூச்சு விடமுடியாமல் இருக்க காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போடுகிறார். அப்போது பாரதியும் கண்ணம்மாவும் பேசிக் கொண்டிருக்க, ஒரு பையன் வேகமாக வந்து லட்சுமி தண்ணீரில் மூழ்கி கொண்டிருப்பதாக சொல்கிறார். அப்போது பாரதி கண்ணம்மா வேகமாக ஓடி சென்று பார்க்க லட்சுமி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது பாரதி வேகமாக சென்று லக்ஷ்மியை காப்பாற்றுகிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் லட்சுமி மூச்சு இல்லாமல் இருக்க முதலுதவி செய்ய லட்சுமி கண் விழிக்கிறாள். நன்றி டாக்டர் அப்பா என சொல்ல, உன்னை நினைத்து எவ்வளவு பதறி போனேன் தெரியுமா என பாரதி சொல்கிறார். பின் லட்சுமி மன்னித்துவிடுங்கள் என சொல்ல, கண்ணம்மா பதட்டமாக இருக்கிறார். காரில் வரும் போது கண்ணம்மா அழுது கொண்டே வருகிறார். அப்போது பாரதி அதான் எல்லாம் சரியாகிவிட்டதே அப்பறம் என்ன என கேட்க, எனக்கு எல்லாமே லட்சுமி தான். நான் அவளை வளர்த்ததை விட அவள் தான் என்னை வளர்த்தால் என சொல்கிறார்.

எனக்கு இருப்பது அவள் மட்டும் தான் என்னுடைய மகளை கைப்பற்றியதை என்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என சொல்கிறார். பின் கண்ணம்மா ஜன்னலை இறக்கிவிட வெளி காற்று பட்டால் நன்றாக இருக்கும் அதான் என சொல்கிறார். பின் கண்ணம்மா பாரதிக்கு நன்றி என சொல்ல எத்தனை முறை தான் சொல்வாய் என கேட்கிறார். அப்போது எங்களை வீடு வரை கொண்டு வந்து விடுவதற்கு தான் என சொல்கிறார். பின் லட்சுமிக்கு இருமல் வர கண்ணம்மா பதட்டமடைகிறார். அப்போது பாரதி அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். பின் கண்ணம்மா பழைய நினைவுகளை பற்றி பேசுகிறார். நீங்க நமக்கு கல்யாணம் முடிந்த புதிதில் இப்படி தான் இரு குழந்தைகள் பெற்றுக் கொண்டு காரில் செல்ல வேண்டும் என சொல்வீங்க அதான் இப்போ நடக்கிறது என சொல்கிறார்.

திருமண பந்தத்தில் இணையும் நடிகை யாஷிகா ஆனந்த் – மாப்பிள்ளை யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

ஆனால் அப்போது இருந்த சந்தோசம் இப்போ இல்லை என கண்ணம்மா சொல்கிறார். பின் அஞ்சலி கண்ணம்மாவிற்கு போன் செய்ய எப்படி இருக்கிறாய் என கண்ணம்மா கேட்கிறார். லட்சுமிதண்ணீர் உள்ளே விழுந்து விட்டாளாம் இப்போது எப்படி இருக்கிறாள் என கேட்க நன்றாக இருக்கிறாள் என சொல்கிறார். மாமா அத்தை கிட்ட கூட சொல்லாமல் இந்த விஷயத்தை சொன்னார் என சொல்கிறார். பின் நீங்க எல்லாரும் சேர்ந்து போனதால் நாங்க மிகவும் சந்தோசப்பட்டோம் என சொல்கிறார். பின் பாரதி விடும் வார்த்தைகளை தான் பொறுத்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். பின் ஸ்கூலில் மிஸ் வந்து ட்ரிப் பற்றி கேட்கிறார். அப்போது லட்சுமி ஹேமாவை டூர் பற்றி எழுத சொல்ல ஹேமா யார் என லட்சுமி நினைக்கிறார். ஒருவேளை அவள் என்னுடைய தங்கச்சியாக இருக்குமோ என நினைக்கிறார். பின் ஹேமா சமையல் அம்மா அப்பா திருமணம் செய்ய வேண்டும் என எழுத மிஸ் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் கண்ணம்மாவிடம் அது பற்றி கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!