கண்ணம்மாவை பார்த்ததும் கண்முழித்த ஹேமா, பாரதியை குழப்பிவிடும் வெண்பா – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மாவை பார்த்ததும் கண்முழித்த ஹேமா, பாரதியை குழப்பிவிடும் வெண்பா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவை பார்த்ததும் கண்முழித்த ஹேமா, பாரதியை குழப்பிவிடும் வெண்பா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவை பார்த்ததும் கண்முழித்த ஹேமா, பாரதியை குழப்பிவிடும் வெண்பா – இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதியின் அமெரிக்கா போகும் முடிவினை மாற்றிக் கொள்ளும்படி அனைவரும் வற்புறுத்துகின்றனர். ஹேமாவின் உடல் நிலையினை கருத்தில் கொண்டு பாரதியும் தனது முடிவை மாற்றிக் கொள்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமா, கண்ணம்மாவை பார்த்ததும் விழித்து கொள்கிறார். அதே போல் மிகவும் மகிழ்ச்சியுடன் அவரிடம் பேசவும் செய்கிறார். இதனால் அனைவரும் ஆச்சரியம் அடைந்து விடுகின்றனர். கண்ணம்மா ஹேமாவை சமாதானம் செய்கிறார். ஹேமா கண்ணம்மாவிடம் தனக்கு அமெரிக்கா போக விருப்பம் இல்லை என்றும், அதனால் அது குறித்து பாரதியிடம் பேசி பார்க்குமாறும் கூறுகிறார். இதனை கேட்டு கண்ணம்மா சற்று தயங்குகிறார். பின், ஹேமாவையே பாரதியிடம் பேச சொல்கிறார்.

இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – உத்தரகண்ட் அரசு அறிவிப்பு!

பின், சௌந்தர்யா பாரதியை அழைத்து வந்து அமெரிக்கா போகும் முடிவினை மாற்றிக் கொள்ளும்படி கூறுகிறார். நடந்த அனைத்தையும் பார்க்கும் பாரதி இனி ஹேமாவை அமெரிக்கா அழைத்து செல்வது தவறான முடிவாக இருக்கும் என்று யோசிக்கிறார். பின், ஹேமா மற்றும் வீட்டினர் அனைவர் முன்பாகவும் அமெரிக்கா போகும் டிக்கெட்டுகளை கிழித்து எரிந்து விடுகிறார். இதனால் ஹேமா, கண்ணம்மா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சந்தோசம் அடைந்து விடுகின்றனர். பின், பாரதி இனி அமெரிக்கா போகும் முடிவினை தான் எடுக்க மாட்டேன் என்றும் கூறுகிறார்.

மருத்துவர் ஹேமாவை எதாவது சாப்பிட சொல்லுகிறார். அப்போது கண்ணம்மாவே ஹேமாவிற்கு ஜூஸ் எடுத்து கொடுக்கிறார். இதனை பார்க்கும் பாரதிக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஹேமாவின் மீது கண்ணம்மாவிற்கு எதற்காக இவ்வளவு அன்பு இருக்க வேண்டும் என்று யோசிக்கிறார். அப்போது வெண்பா வந்து பாரதியின் மனதினை மாற்றுவது போல பேசுகிறார்.

TN Job “FB  Group” Join Now

ஹேமா தற்போது தாய் அன்பிற்கு ஏங்குவதால் தான், இப்படி கண்ணம்மாவின் மீது பாசமாக இருக்கிறாள் என்றும் அதனை கண்ணம்மா பயன்படுத்தி கொள்வதாகவும் கூறுகிறார். கூடிய விரைவில் இதற்கு ஒரு நல்ல முடிவினை எடுக்கவும் பாரதியை அறிவுறுத்தி விட்டு செல்கிறார். இதனால் பாரதி மீண்டும் குழப்பம் அடைந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here