ஹேமாவுடன் அமெரிக்கா கிளம்பும் பாரதி, தடுக்க நினைக்கும் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

0
ஹேமாவுடன் அமெரிக்கா கிளம்பும் பாரதி, தடுக்க நினைக்கும் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
ஹேமாவுடன் அமெரிக்கா கிளம்பும் பாரதி, தடுக்க நினைக்கும் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
ஹேமாவுடன் அமெரிக்கா கிளம்பும் பாரதி, தடுக்க நினைக்கும் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதியை அமெரிக்கா போக விடாமல் தடுக்க சௌந்தர்யா முயற்சி செய்கிறார். ஹேமா அனைவருக்கும் கண்ணீருடன் விடை கொடுக்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி, ஹேமாவை அமெரிக்கா அழைத்து செல்வதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், சௌந்தர்யா ஹேமா மற்றும் பாரதி இருவரையும் தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். அஞ்சலி, வேணு என்று அனைவரும் பாரதியிடம் பதமாக எடுத்து கூறுகின்றனர். ஆனால், பாரதி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். அதேபோல் ஹேமாவை பரிசோதித்த மருத்துவரும் ஹேமா தற்போது பயணம் செய்வது நல்லதல்ல என்று எடுத்துரைக்கிறார்.

தமிழக ரயில் நிலையங்களில் கொரோனா ‘ஸ்கேனர் கருவி’ – நிர்வாகம் நடவடிக்கை!

பாரதி தனது பேச்சினை கேட்கவில்லை என்றதும், சௌந்தர்யா ஹேமாவை தத்தெடுத்த பத்திரத்தை கிழித்து போடுகிறார். அதே போல் ஹேமா, பாரதியின் குழந்தை என்று சாட்சி கூற சொன்னால் நாங்கள் யாரும் வர மாட்டோம் என்றும் மிரட்டுகிறார். இதனால் பாரதி தனது முயற்சியினை கைவிடுவார் என்று எண்ணுகிறார் சௌந்தர்யா. ஆனால், சௌந்தர்யாவின் இந்த பேச்சினை கேட்டு விட்டு பாரதி சிரிக்கிறார். அதோடு இது போன்றவற்றை சௌந்தர்யா செய்வார் என்று தனக்கு முன்பே தெரியும் என்றும் கூறுகிறார்.

TN Job “FB  Group” Join Now

இது போன்ற ஏதாவது சௌந்தர்யா செய்தால், தான் அனைத்து உறுப்புகளையும் செயலிழக்க செய்யும் மருந்தினை உட்கொண்டு விடுவேன் என்றும் குடும்பத்தினரை மிரட்டுகிறார். இதனால் அனைவரும் மிரண்டு விடுகின்றனர். பின், பாரதி ஹேமாவை கூட்டிக் கொண்டு காரில் ஏர்போர்ட்டிற்கு செல்லுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here