8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 தொடக்கம்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

2
8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 தொடக்கம்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 தொடக்கம்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 தொடக்கம்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக அந்த சீரியல் 2ஆவது சீசனை நோக்கி நகர இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பொதுவாக அதிகளவு பார்வையாளர்களை ஈர்க்கும் சீரியல்கள் அனைத்தும் வருடங்கள் கடந்து ஒளிபரப்பாகி வரும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்கள் 3 அல்லது 4 ஆண்டுகளை தாண்டியும் ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்த வரிசையில் மக்களின் மனம் கவர்ந்து சுமார் 700 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அதன் படி பாரதி மற்றும் கண்ணம்மா குறித்த ரகசியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தியின் பதிவு – கொந்தளித்த விஜே சித்து ரசிகர்கள்! என்ன நடந்தது?

குறிப்பாக வெண்பா மற்றும் பாரதியின் திருமண ரகசியம், கண்ணம்மாவின் குழந்தை லட்சுமி, காணாமல் போன 2ஆவது குழந்தை போன்ற அனைத்து ரகசியங்களும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனுடன் இன்றைய எபிசோடில் கூட, கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்த விஷயத்தை பாரதி கண்ணம்மாவிடம் கூறுகிறார். குறிப்பாக பாரதியை DNA டெஸ்ட் எடுக்க வரச்சொல்லி கண்ணம்மா கேட்கிறார். இந்த காட்சிகளை காண்கையில், பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே ஒரு புரிதல் ஏற்படுவது போல தெரிகிறது.

முதன்முறையாக மனம் திறந்த “பாரதி கண்ணம்மா” பரீனா – ‘தனது வாழ்க்கையில் செய்த தவறு’!

அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது முடிவுக்கு வர இருப்பதாகவும், விரைவில் அதன் 2ம் பாகம் ஒளிபரப்பாகும் என சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதாவது ‘பாரதி கண்ணம்மா’ 2வது சீசன் 8 ஆண்டுகளுக்கு பிறகு என்ற கோணத்தில் வெளியாகும் எனவும், லட்சுமி கதாப்பாத்திரத்தில் நடிகை அனிகா நடிக்க இருப்பதாகவும், சில எடிட்கள் உலா வருகிறது. இந்த தகவல்கள் எவ்விதத்தில் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இது தொடர்பாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் குழுவினர் இதுவரை எந்தவொரு கருத்துக்களையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. பாரதி கண்ணம்மா சீசன் 2 பற்றி வெளிவந்த ஒரு போட்டோவில் மேலே பாரதியும் கண்ணம்மாவும் இருக்க அவர்களுக்கு கீழே சுடிதார் போட்ட கண்ணாம்மாவும் அனிகாவும் இருப்பது.போல் பார்த்தேன்.

    அதிலிருந்து இப்போதிருக்கும் ஹேமா 8 வருடத்திற்கு பிறகு கண்ணம்மா போலவே இருப்பாள் என்று யூகித்து நம் கண்ணம்மா தாயும் மகள் ஹேமாவாகவும் இரட்டை வேடத்தில் வர இருப்பதாக நினைத்து மனதில் ஏகப்பட்ட மகிழ்ச்சி அடைகிறேன்

    – V. Sukhavana Vidhya

  2. இன்னும் டைம் வேஸ்ட் பண்ண நாங்கள் முட்டாள்கள் அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!