‘பாரதி கண்ணம்மா’ வினுஷா கடந்து வந்த பாதை – அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' வினுஷா கடந்து வந்த பாதை - அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' வினுஷா கடந்து வந்த பாதை - அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ வினுஷா கடந்து வந்த பாதை – அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை வினுஷா தேவி தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை, சினிமா பயணம் மற்றும் சீரியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த தகவல் தற்போது வரவேற்புகளை பெற்று வருகிறது.

நடிகை வினுஷா

தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சில முக்கியமான திருப்பங்கள் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கடந்த வாரம் வெளியான எபிசோடில் கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வதாக கூறும் பாரதி, லட்சுமி தகாத உறவினால் பிறந்த குழந்தை என்கிற உண்மையை ஒப்புக்கொள்ளும் படி ஒரு நிபந்தனை வைக்கிறார். ஏற்கனவே சுய மரியாதை சிங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணம்மா பாரதியின் கேள்விக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விடுகிறார்.

விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் கத்தி – ரசிகர்கள் உற்சகம்!

என்னடா இது பாரதியும், கண்ணம்மாவும் ஒன்று சேருவார்கள் என்று பார்த்தால் இப்படி ஆகி விட்டதே என ரசிகர்கள் ஒருபக்கம் குமுற ஆரம்பித்துள்ளனர். இதை தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் ரசிகர்கள் மீண்டும் அதிரடியான கண்ணம்மாவை கண்டு ரசித்து வருகின்றனர். இப்படி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மக்கள் விரும்பும் கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை வினுஷா அந்த ரோலுக்கு ஏற்ற நடிப்பை கொடுத்து கிளாப்ஸ்களை அள்ளி வருகிறார்.

அந்த வகையில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருக்கும் நடிகை வினுஷா ஒரு டிக் டாக் பிரபலம் ஆவார். தமிழ் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை வினுஷா இப்போது கண்ணம்மாவாக சீரியலில் கலக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை வினுஷா தனது ஆரம்ப கால வாழ்க்கை, சீரியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுடன் மனம் திறந்திருக்கிறார். அதாவது, நடிகை வினுஷா சென்னையில் பிறந்து, வளர்ந்து, அங்கேயே படித்து முடித்திருக்கிறார்.

பக்கவாதத்தில் முடங்கிய தாத்தா, ராதிகா விஷயத்தில் சிக்குவாரா கோபி? பாக்கியலட்சுமி அடுத்த எபிசோட்!

சிறிய வயதில் அப்பாவை இழந்த வினுஷா அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்திருக்கிறார். கல்லூரியில் படித்த போது தன்னை பலர் பின் தொடர்ந்ததாகவும், தொட்டு பேசுவது, பாலோ செய்வது எல்லாம் தனக்கு பிடிக்காது என்றும் கூறி இருக்கிறார். இப்போது ‘பாரதி கண்ணம்மா’ என்ட்ரி குறித்து பேசிய வினுஷா, இயக்குனர் பிரவீன் பென்னட் அவர்களை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வந்தவருக்கு இயக்குனர் கண்ணம்மா ரீபிளேஸ்மென்ட் குறித்து மெசேஜ் செய்திருக்கிறார். பிறகு இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அந்த வகையில் சிறிய வயதாக இருந்தாலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது குறித்து பேசிய வினுஷா, இது ஒரு கதாப்பாத்திரம் தான். இதில் குழந்தைகளுக்கு தாயக நடிப்பது என்று எதுவும் வித்தியாசமாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது IT துறையில் வேலை பார்த்து வரும் நடிகை வினுஷா, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை மேனேஜ் செய்யும் விதம் குறித்து கூறி இருக்கிறார். சினிமாவை பொறுத்தவரை கலரான நடிகைகளுக்கு டார்க் மேக்கப் போட்டு நடிக்க வைப்பதற்கு மாநிறத்தில் உள்ள நடிகைகளுக்கு வாய்ப்புகள் கொடுக்கலாம் என்று கூறுகிறார் நடிகை வினுஷா.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here