‘பாரதி கண்ணம்மா’ ஹேமா, லட்சுமியுடன் இணைந்த வில்லி வெண்பா – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
'பாரதி கண்ணம்மா' ஹேமா, லட்சுமியுடன் இணைந்த வில்லி வெண்பா - அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
'பாரதி கண்ணம்மா' ஹேமா, லட்சுமியுடன் இணைந்த வில்லி வெண்பா - அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
‘பாரதி கண்ணம்மா’ ஹேமா, லட்சுமியுடன் இணைந்த வில்லி வெண்பா – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வில்லி வெண்பா பல நாட்கள் கழித்து மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளதால், அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு காட்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது.

வெண்பாவுடன் குழந்தைகள்:

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை ஃபரீனா தற்போது சில நாட்களாக தான் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது பிரசவம் காரணமாக ஒரு மாதம் ஓய்வில் இருந்தார். அதன் பிறகு சீரியலில் அவரின் ரீ என்ட்ரி எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவிற்கு மிகவும் சீரியசான காட்சிகள் எதுவும் வெண்பாவிற்கு வரவில்லை. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் கண்மணிக்கு திடீர் திருமணம்? ஷாக்கான ரசிகர்கள்!

ஆனால் தற்போது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சீரியலில் சற்று ஆரவாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இனி வெண்பாவின் முழு தில்லுமுல்லுகளையும் காணலாம். தற்போது கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவிற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அன்று லக்ஷ்மியின் அப்பா பற்றி கண்ணம்மா சொல்லப்போவதாக கூறியிருப்பதால் மிகுந்த பரபரப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இந்த வாரத்தில் வர இருக்கிறது.

காதலர் தின கவலையில் சமந்தா, தனுஷ் – விவாகரத்தான பிரபலங்கள்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வில்லி வெண்பா தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில், குழந்தைகள் லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் பள்ளி சீருடையில் இருக்கிறார்கள். அவர்களுடன் வெண்பாவும் இருக்கிறார். இதனால் வெண்பா குழந்தைகளை பள்ளிக்கு சென்று சந்தித்து கடத்த திட்டமிடலாம் என்பது போன்ற யூகங்கள் எழுந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!