‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் துர்கா – ரசிகர்கள் ஷாக்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் துர்கா - ரசிகர்கள் ஷாக்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் துர்கா - ரசிகர்கள் ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் துர்கா – ரசிகர்கள் ஷாக்!

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் வில்லி வெண்பாவுக்கே ஆப்பு வைக்க அவரது அம்மா பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்ட்ரி இன்றைய எபிசோட்டில் காட்டப்பட உள்ளது. இதனை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் அந்த மாப்பிள்ளை யார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

பாரதி கண்ணம்மா:

சமீப காலமாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் தவறாது முதல் ஐந்துக்குள் இடம் பெற்று வரும் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடர் பாரதி கண்ணம்மா தொடர்ந்து பல புது திருப்பங்களை கொண்டு நகர்கிறது. ஆரம்ப காலத்தில் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் எப்படி விமர்சனங்களோடு கூடிய ரீச் பெற்றதோ அது போலவே தொடர்ந்து ஒவ்வொரு காட்சிகளும் நெட்டிசன்களுக்கு தவறாமல் வேலை கொடுத்து விடுகிறது. அந்த வரிசையில் தற்போது வெண்பாவின் திருமணம் குறித்த எபிசோடுகளும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஜூன் மாதத்தில் வங்கிகள் 6 நாட்களுக்கு மூடப்படும் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

நாடகத்தில் வில்லியாக வலம் வந்த வெண்பா என்னதான் பாரதியையும், கண்ணம்மாவையும் பிரிக்க பல சதிகள் பண்ணினாலும் அவரது வாழ்க்கை என்று வரும் போது எந்த கில்லாடி தனமும் செய்யமுடியவில்லை. ஏனென்றால் வில்லிக்கே ட்விஸ்ட் கொடுக்க வந்தது வெண்பாவின் அம்மா ஷர்மிளா என்பதால் தான். சீரியலில் இன்றைய எபிசோடில் வெண்பாவை திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளையின் என்ட்ரி ஒளிபரப்பாகவுள்ளது.

அதாவது, ஷர்மிளா, வெண்பாவிடம் இன்று உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் சீக்கிரம் ரெடி ஆகு என்கிறார். யார் மாப்பிள்ளை? என தெரிந்து கொள்வதில் வெண்பாவும், சாந்தியும் ஆவலாக இருக்கின்றனர். ஷர்மிளாவும் நகை, பூ, புடவை என அனைத்தையும் வெண்பா கையில் கொடுத்து விட்டு மாப்பிளை யார் என்பதை இறுதி வரை சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்கிறார். பிறகு மாப்பிள்ளை வீட்டாரும் வருகை தர, வெண்பாவும் அடக்க ஒடுக்கமான ஹோம்லி பெண்ணாக வருகிறார். இதை பார்த்த ஷர்மிளாவுக்கே ஷாக்! என்னோட பொண்ணா இது? என்று நினைக்கிறார்.

Exams Daily Mobile App Download

பிறகு எல்லா திரைப்படத்திலும் வருவது போல் வெண்பா தன்னை பற்றி தவறாக சொல்லி மாப்பிள்ளையை ஓட வைப்பதற்காக அவரிடம் தனியாக பேச வேண்டும் என்கிறார். அதன் படி தவறாக சொல்லி அனுப்பியும் விடுகிறார். இவ்வாறு இந்த ப்ரோமோவை பார்த்த வெண்பாவின் ரசிகர்கள் இந்த காமெடி ட்ராக்கை விரும்பி பார்க்கிறார்கள். மேலும், வெண்பாவை பார்க்க வரும் மாப்பிள்ளை துர்கா தான் என இணையத்தில் அதிக அளவு பேசப்பட்டு வரும் ஒன்றாக மாறியுள்ளது. இன்றைய எபிசோடு ஒளிபரப்பாகிய பிறகு தான் யார் அந்த மாப்பிள்ளை என தெரியவரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!