கோலாகலமாக அரங்கேறும் பாரதி வெண்பா திருமணம், தடுப்பாரா கண்ணம்மா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது லக்ஷ்மிக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிந்து விட்டது என கண்ணம்மா கண்டுபிடித்து விட்டார். வெண்பா பாரதியிடம் இறங்கி வந்து பேச பாரதிக்கு வெண்பா மீது அக்கறை வருகிறது. அதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் வெண்பா பாரதியின் திருமண ஏற்பாடுகள் நடைபெற இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கதையில் தற்போது லக்ஷ்மிக்கு உண்மை தெரிந்துள்ளது என்பதை கண்டுபிடித்த கண்ணம்மா சௌந்தர்யாவிடம் சொல்ல, லட்சுமி சௌந்தர்யாவிடம் பல கேள்விகளை கேட்கிறார். அதெற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் சௌந்தர்யா திணற அதை தான் மூன்று நாள் எபிசோடுகளில் காட்டப்பட்டது. இந்நிலையில் பாரதி வீட்டிற்கு வர சக்தியின் உயிரை காப்பாற்ற அவர் செய்த முயற்சிகளை பார்த்து குடும்பத்தினர் சந்தோசப்படுகின்றனர்.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட் – சந்தியாவிற்கு எழுந்த சந்தேகம்!
நாளை வெண்பாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வர இருப்பதாக ஷர்மிளா சொல்லி இருக்கிறார். அதனால் கடுப்பில் இருந்த வெண்பா மீண்டும் ஷர்மிளாவிடம் சென்று பாரதி கண்டிப்பாக என்னை திருமணம் செய்து கொள்வான் என சொல்கிறார். ஆனால் ஷர்மிளா நீ முட்டாளாக இருக்கலாம். ஆனால் நான் முட்டாள் இல்லை, சக்தி உயிரை காப்பாற்றியதில் கூட பாரதி கண்ணம்மாவை தான் புகழ்ந்து பேசினான் என சொல்கிறார்
Exams Daily Mobile App Download
அதனால் வெண்பா பாரதிக்கு போன் செய்து நீ நல்ல நண்பனாக நடந்து கொள்ளவில்லை என சொல்கிறார். பாரதிக்கு வெண்பா சொன்னதை பார்த்து மனம் இறங்குகிறது. மறுபக்கம் கண்ணம்மா மீது இருக்கும் கோவத்தால் பாரதி வெண்பாவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். வெண்பா பாரதியின் திருமணம் கோலாகலமாக நடக்கிறது. இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கண்ணம்மா இந்த திருமணத்தை நிறுத்த என்ன முயற்சிகளை செய்ய இருக்கிறார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.