விவாகரத்து விஷயத்தில் அடம்பிடிக்கும் ஹேமா, ஒத்துக் கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
விவாகரத்து விஷயத்தில் அடம்பிடிக்கும் ஹேமா, ஒத்துக் கொள்ளும் பாரதி - சீரியலில் அடுத்த திருப்பம்!
விவாகரத்து விஷயத்தில் அடம்பிடிக்கும் ஹேமா, ஒத்துக் கொள்ளும் பாரதி - சீரியலில் அடுத்த திருப்பம்!
விவாகரத்து விஷயத்தில் அடம்பிடிக்கும் ஹேமா, ஒத்துக் கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்த திருப்பம்!

பாரதி கண்ணம்மா சீரியல் தொடங்கும் போது ஒரு கதையாகவும், தொடர்ந்து ஒளிபரப்பாகி இதனை வருடங்களாக செண்டு கொண்டிருப்பதால் தற்போது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் சென்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத புதிய திருப்பம் ஒன்று வரவுள்ளது.

விவாகரத்து விஷயம்:

பாரதியும், கண்ணம்மாவும் தான் தனது உண்மையான அப்பா மற்றும் அம்மா என்பதை அறிவதற்கு முன்பாகவே குழந்தைகள் இருவரும் மற்றவர் மீது மிகவும் பாசமாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஹேமா சமையல் அம்மாவே தனது அப்பாவை திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று யோசிக்கிறார். முதலில் பாரதி தான் தனது அப்பா என்பதை அறியாத லட்சுமி, ஹேமாவின் ஆசையை அறிந்து கோவப்பட்டார். ஆனால் பாரதி தான் தனது நிஜ அப்பா என்பதை அறிந்த பிறகு ஹேமாவின் ஆசைக்கு பச்சை கோடி காட்டி விட்டார்.

ராதிகா மீது போலீசில் புகார் கொடுத்த ராஜேஷ் – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!

இதனால் குழந்தைகள் இருவரும் பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஹேமாவிற்கு பாரதியின் விவாகரத்து விஷயம் எதிர்பாராத விதமாக தெரிய வருகிறது. இதைப்பற்றி லட்சுமியிடம் கேட்டு அறிந்து, பாரதியிடம் தனது அம்மாவை பற்றி கேட்டு தொல்லை செய்கிறார். ஆனால், பாரதி இதை எல்லாம் கண்ணம்மா தான் சொல்லி கொடுத்துள்ளார் என்று நினைத்து முதலில் சண்டை போடுகிறார். பிறகு, தான் ஹேமா தான் பேசியதை கேட்டு தெரிந்துள்ளார் என்ற உண்மை தெரிய வந்தது.

Exams Daily Mobile App Download\

வெண்பாவின் வீட்டில் நடந்த விழாவிற்கு பாரதியும், ஹேமாவும் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது, அங்கு சமையல் அம்மா இருப்பதை பார்த்து ஹேமா சந்தோசப்படுகிறார். அடுத்ததாக, அப்பாவிடம் டைவர்ஸ் வேண்டாம் ன்னு சொல்லுங்க சமையல் அம்மா என்று ஹேமா அழுது அடம்பிடிக்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஒரு கட்டத்தில் ஹேமாவை சமாளிக்க முடியாமல் பாரதி, சரி நான் டைவர்ஸ் பண்ணல என்று சொல்லி விடுகிறார். இதனால் கண்ணம்மா உட்பட வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!