DNA டெஸ்ட் எடுத்து ஒன்று சேரும் ஜோடி, புற்றுநோயால் பாதிக்கப்படும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது வெளியான ப்ரோமோவில் பாரதி கண்ணம்மாவும் சேர்ந்து வாழ இருப்பதாக காட்டப்பட்டதை தொடர்ந்து சீரியல் முடிய போகிறதா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் திருப்பங்கள் வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல தற்போது இருவரும் ஜோடியாக சேர்ந்து வாழ இருக்கின்றனர். ஆனால் பாரதி எதோ கண்டிஷன் ஒன்றை இன்னும் 2 நாட்களில் சொல்ல இருக்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பா மற்றொரு தொலைக்காட்சியில் புதிய சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் அஞ்சலி கண்மணியும் வேறு தொலைக்காட்சியில் கமிட்டாகி உள்ளார்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் பொங்கல் கொண்டாட்டம் – வைரல் வீடியோ!
இரு முக்கிய கதாபாத்திரங்கள் வேறு சீரியலில் நடிப்பதால் இந்த சீரியல் முடியப் போகிறதா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் அது உண்மை இல்லை, பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது முடியாது, வெண்பாவாக பரீனா தான் நடிப்பாராம். ஆனால் சீரியலில் இன்னும் 5 நாட்களில் என ட்விஸ்ட் வைத்து ப்ரோமோ வெளியாக என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் கன்னடத்தில் எடுத்த முத்துலட்சுமி சீரியல் கதையை மையமாக கொண்டு தான் எடுக்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய அஞ்சலி ஸ்வீட்டி? ரசிகர்கள் அதிர்ச்சி!
அது படி பார்த்தால் பாரதியும், கண்ணம்மாவும் DNA டெஸ்ட் எடுத்து மீண்டும் சேர்ந்து வாழ தொடங்குவார்கள் எனவும், அதன் பின் பாரதிக்கு கேன்சர் வரும் எனவும் அந்த நேரத்தில் கண்ணம்மா பாரதியை நன்றாக பார்த்துக் கொள்வார் எனவும், டிரீட்மென்ட் எடுக்க பாரதி வெளிநாடு போவார் என்பது போல கதை கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதனால் இன்னும் பல எபிசோடுகள் இந்த சீரியல் போகும், தற்போது முடிய வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.