‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? அடுத்த ட்விஸ்ட்! கலாய்க்கும் ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? அடுத்த ட்விஸ்ட்! கலாய்க்கும் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? அடுத்த ட்விஸ்ட்! கலாய்க்கும் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? அடுத்த ட்விஸ்ட்! கலாய்க்கும் ரசிகர்கள்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கண்ணம்மா கதாப்பாத்திரம் மீண்டும் கர்ப்பமாக இருப்பது போல வெளியான சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கலாய்த்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

எதிர்பாராத பல்வேறு திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் விஐய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை நோக்கி முன்னேற இருக்கிறது. இந்த சீரியலில் இதுவரை கண்ணம்மா வீட்டில் வசித்து வந்த பாரதி மற்றும் கண்ணம்மா ஜோடி, பூஜைக்காக சௌந்தர்யா வீட்டுக்கு செல்ல உள்ளனர். இதற்கிடையில் பாரதிக்கு கண்ணம்மா மீது ஏற்பட்ட நல்ல எண்ணங்களை கலைக்கும் படியாக வெண்பா ஒரு பக்கம் திட்டமிட்டு வருகிறார்.

“பாரதி கண்ணம்மா” வெண்பா உடன் இணைந்து ஹேமா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

இப்போது பாரதி, கண்ணம்மாவுக்கு நடக்கப்போகும் பூஜையில் என்னவெல்லாம் கலாட்டாக்கள் நடைபெற இருக்கிறது என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் வில்லி வெண்பாவுடன் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் இருப்பதை போல வெளியான புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஒருவேளை வெண்பா இவர்கள் இருவரையும் கடத்தி இருப்பாரோ என்று சந்தேகத்தை கிளப்பி இருந்தனர். இதை தொடர்ந்து தற்போது கண்ணம்மா 2வது முறையாக கர்ப்பமாக இருப்பது போல சில வீடியோக்கள் வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதாவது ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகை வினுஷா மற்றும் பேபி லிசா இருவரும் எடுத்துக்கொண்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று வலைதளத்தில் வெளியானது. அதில் கண்ணம்மாவின் பேபி பம்ப் தெரிவதாக ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதே போல கண்ணம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையை ஹேமா, லட்சுமி இருவரும் முத்தமிடுவது போலவும் ஒரு வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது கண்ணம்மா கர்ப்பமாக இருக்கும் தகவல் உறுதியாகி இருக்கிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா சாய் காயத்ரி சந்தித்த சவால்கள் – மனம் திறந்த நடிகை!

மறுபக்கத்தில் இந்த கர்ப்பம் தொடர்பான காட்சிகள் கனவு சம்பந்தப்பட்ட காட்சிகளில் இடம் பிடிக்கலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் ஏற்கனவே இருக்கும் 2 குழந்தைகளுக்கு DNA டெஸ்ட் கூட எடுக்க முடியவில்லை இதில் இன்னொரு குழந்தையா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!