பாரதியை DNA டெஸ்ட் எடுக்க அழைக்கும் கண்ணம்மா, உண்மை வெளிப்படுமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
பாரதியை DNA டெஸ்ட் எடுக்க அழைக்கும் கண்ணம்மா, உண்மை வெளிப்படுமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாரதியை DNA டெஸ்ட் எடுக்க அழைக்கும் கண்ணம்மா, உண்மை வெளிப்படுமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாரதியை DNA டெஸ்ட் எடுக்க அழைக்கும் கண்ணம்மா, உண்மை வெளிப்படுமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மாவின் பிறந்தநாளிற்கு வர மாட்டேன் என்று கூறி வரும் நிலையில், இது பற்றி சொல்ல கண்ணம்மா வீட்டிற்கு நேரடியாக செல்கிறார். அப்போது கண்ணம்மா பாரதியை DNA டெஸ்ட் எடுக்க அழைக்கிறார்.

DNA டெஸ்ட்:

பாரதி கண்ணம்மா தொடரில் மையக்கருவே ஒரு சந்தேகத்தை அடிப்படையாக கொண்டு தான் செல்கிறது. மருத்துவராக இருக்கும் பாரதி தனக்கு நடந்த விபத்தினால் தன்னால் குழந்தைக்கு அப்பாவாக முடியாது என்ற பொய்யான ரிப்போர்ட்டை நம்புகிறான். ஆனால் தன் மனைவி கண்ணம்மா கர்ப்பமானதை தெரிந்து மீண்டும் ஒரு முறை DNA டெஸ்ட் எடுக்கிறான். ஆனால் அப்போதும் வில்லி வெண்பா செய்யும் சூழ்ச்சியால் ரிப்போர்ட் தப்பாக வருகிறது.

காதலர் தினத்தில் கணவர் பெயரை நீக்கிய ரஜினிகாந்த் மகள் – ரசிகர்கள் ஷாக்!

இதனால் கண்ணம்மாவின் நடத்தையை சந்தேகப்பட்டு அதன் விளைவால் தான் கதை இந்த வழியில் செல்கிறது. கண்ணம்மாவிற்கு குழந்தை பிறந்து 9 வருடங்கள் கழிந்த பிறகு தற்போது குழந்தையின் அப்பா யார் என்பதை சொல்லப்போவதாக கூறுகிறார். வரப்போகும் தன் பிறந்த நாள் அன்று தான் இதை சொல்ல இருப்பதாக கூறியவுடன், அனைவருக்கும் மிகவும் பதற்றமாகி விடுகிறது. பிறந்த நாள் விழாவிற்கு பாரதியை கண்ணம்மா அழைக்கிறாள். தான் வர மாட்டேன் என்று சொல்வதற்காக பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வருகிறான்.

விஜய் டிவி முன்னணி சீரியல்களில் நேர மாற்றம் – இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ்!

கண்ணம்மா வீட்டில், இப்போ கூட நீ செஞ்ச தப்ப ஒத்துக்கோ, அப்படி நீ சொன்ன மட்டும் நான் உன் தான் குழந்தைக்கு அப்பா ன்னு சொல்றேன் என்று சொல்கிறான். இதனால் கோபமடைந்த கண்ணம்மா, 1000 முறை சொன்னாலும் நான் பண்ணாத தப்ப ஒத்துக்க சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன். ஒழுங்கா உங்க சந்தேகத்தை விட்டுட்டு இருங்க, இல்லனா DNA டெஸ்ட் எடுக்க வாங்க என்று சொல்லி திட்டி விடுகிறாள். இதனால் பாரதி கோவமாக அங்கிருந்து செல்கிறான். இந்த சம்பவத்தினால் சீரியலில் அடுத்து வரப்போகும் குறித்து ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here