வெண்பாவை திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை இவரா? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என ஷர்மிளா அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில் வெண்பாவை போலீஸ் பிடித்துவிட்டு போக அவரை வெளியே எடுக்க வேண்டும் என்றால் அவர் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய வேண்டும் என ஷர்மிளா சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல திருப்பங்கள் வர போகிறது. பாரதியை திருமணம் செய்ய வேண்டும் என பல கனவுடன் வெண்பா இருக்க அவருடைய அம்மா வந்து அந்த கனவை கலைக்க போகிறார். 10 ஆண்டுகள் உனக்கு நேரம் கொடுத்துவிட்டேன் இனிமேல் கண்டிப்பாக நீ திருமணம் செய்ய வேண்டும் என அவர் சொல்ல அது பற்றி பாரதியிடம் பேசிவிடுகிறார். ஆனால் பாரதி வெண்பாவை அப்படி நினைக்கவே இல்லை என்பது போல பேசிவிடுகிறார்.
இந்நிலையில் விக்ரமின் மருத்துவமனையில் கண்ணம்மா வேலைக்கு சேர இது தான் பாரதியின் மனைவி என வெண்பா சொல்கிறார். இவளிடம் நீ சண்டைக்கு இருக்கியா என ஷர்மிளா கேட்க இனிமேல் இதை எல்லாம் விட்டுவிட சொல்கிறார். பின் வெண்பாவை போலீசார் கைது செய்கின்றனர். அப்போது வெண்பாவை திட்டிய ஷர்மிளா போலீஸ் ஸ்டேஷன் வந்து வெண்பாவை பார்க்க வருகிறார். அப்போது வெண்பா ஜாமினில் எடுக்க வேண்டும் என கெஞ்சுகிறார்.
ExamsDaily Mobile App Download
அதையே சாதகமாக பயன்படுத்தி ஷர்மிளா வெண்பாவை நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சொல்கிறார். வெண்பாவிற்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். மேலும் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளை யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதிய கதாபாத்திரமாக இருக்குமா அல்லது ஏற்கனவே வந்தவர்களில் ஒருவராக இருக்குமா என ரசிகர்கள் அடுத்த எபிசோட் பார்க்க காத்திருக்கின்றனர்.