வெண்பாவிற்கு வேறொரு திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஷர்மிளா – வெளியான அதிரடி ப்ரோமோ!

1
வெண்பாவிற்கு வேறொரு திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஷர்மிளா - வெளியான அதிரடி ப்ரோமோ!
வெண்பாவிற்கு வேறொரு திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஷர்மிளா - வெளியான அதிரடி ப்ரோமோ!
வெண்பாவிற்கு வேறொரு திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஷர்மிளா – வெளியான அதிரடி ப்ரோமோ!

பல ஆண்டுகளுக்குப் பிறகு வெண்பாவை பார்க்க வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகள் கழித்துமா நீ பாரதியை திருமணம் செய்து கொள்வேன் என நம்பிக் கொண்டு இருக்கிறாய். உனக்கு நான் வேறு மாப்பிள்ளை பார்க்கிறேன் என ஷர்மிளா கூறும்படியான புரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது தான் ஒன்று சேரப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களாக தன்னுடைய அப்பா யார் என தேடிக்கொண்டிருந்த லட்சுமிக்கும் தற்போது விடை கிடைத்துவிட்டது. பாரதிதான் தன்னுடைய அப்பா என அறிந்ததுமே ஒரு நிமிடம் கூட அப்பாவை விட்டு விலகக் கூடாது என பாரதி உடனே இருக்க லட்சுமி நினைக்கிறார்.

முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் – விரைவில் சீசன் 2 அறிமுகம்!

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தன்னுடைய அப்பாவை சமையல் அம்மாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஹேமா திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் விக்ரம் மற்றும் ஷர்மிளா என்கிற புதிதாக இரண்டு கதாபாத்திரம் என்ட்ரி ஆகியுள்ளனர். அதாவது ஷர்மிளா வெண்பாவின் அம்மாவாக அறிமுகமாகியுள்ளார். பாரதியை திருமணம் செய்துகொண்டு ஒரு வருடத்தில் வந்து விடுவேன் எனக் கூறி வந்து பல ஆண்டுகள் கழித்தும் இன்னும் அந்த வேளையை செய்யவே இல்லை என சர்மிளா வெண்பாவிடம் கண்டபடி கேள்வி கேட்கிறார்.

இதற்கு நடுவே பாரதியும் நான் எப்பொழுது உன்னை காதலிக்கிறேன், திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறினேன் என பெண்பாவை கண்டபடி திட்டி விடுகிறார். இதற்கு மேல் என்ன செய்வது எனத் தெரியாமல் வெண்பா விழித்துக் கொண்டிருக்கிறார். ஷர்மிளாவும், 9 ஆண்டுகளுக்கு மேலாகியும் உன்னால் பாரதியை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதற்கு மேலும் திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா, நான் உனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என கூறும்படியான ப்ரோமோ வெளியாகி தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!