கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என தெரிந்து கொண்ட ஹேமா? பாரதியின் முடிவு! ரசிகர்கள் ஷாக்!

0
கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என தெரிந்து கொண்ட ஹேமா? பாரதியின் முடிவு! ரசிகர்கள் ஷாக்!
கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என தெரிந்து கொண்ட ஹேமா? பாரதியின் முடிவு! ரசிகர்கள் ஷாக்!
கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என தெரிந்து கொண்ட ஹேமா? பாரதியின் முடிவு! ரசிகர்கள் ஷாக்!

பாரதி கண்ணம்மா தொடருக்கு ஒரு முற்றுபுள்ளி வருமா என எதிர்பார்த்து வந்த நிலையில் நல்லதொரு விடிவு காலம் பிறக்க உள்ளது போல் தெரிகிறது. அதாவது குழந்தை ஹேமா தற்போது தன்னுடைய அம்மா யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி குடும்பத்தில் உள்ளவர்களிடம் மாற்றி மாற்றி கேள்விகளாய் அடுக்க, என்ன சொல்வதென தெரியாமல் ஹேமாவிடம் பாரதி சிக்குகிறார். இந்நிலையில், அடுத்து நடக்க உள்ள காட்சிகளின் தகவல் கிடைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சி சீரியல்களின் லிஸ்ட்டுகளிலே மிகவும் டல் அடிக்கும் சீரியல் என்றாலும், டி ஆர் பி ரேட்டிங்கில் பின்தங்கி கிடக்கும் சீரியல் என்றாலும் அது பாரதி கண்ணம்மா தான். பாக்கியலட்சுமி சீரியல் தனக்கான இடத்தை விட்டு கொடுக்காமல் சூறாவளி வேகத்தில் பாய, மற்றொரு பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் புது விதமான ட்விஸ்டுகளை கொண்டு வந்து முதல் இடத்தை பிடிக்க துடிக்கும் இயக்குனர் மத்தியில் அதற்கு இணையாக போட்டி போட்டு வர எண்ணி பாரதி கண்ணம்மா தொடர் இயக்குனரும் தற்போது கதைக்களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் லட்சுமி ஷீலாவின் புதிய அவதாரம் – புதிய தொடரில் என்ட்ரி! ரசிகர்கள் உற்சாகம்!

அதாவது சீரியலில் ஹேமாவுக்கு பாரதி, கண்ணம்மா இருவர் பற்றிய உண்மை தெரிய வரும் நேரம் வந்துவிட்டது. ஏனெனில் தற்போது வெளியாகிய ப்ரோமோவை வைத்து பார்க்கையில் அடுத்த வாரம் இந்த திருப்பங்களை எதிர்பார்க்கலாம் என்றே சொல்லலாம். கடந்த சில நாட்களாகவே ஹேமா, கண்ணம்மாவை பற்றி பாரதி, பாட்டி, சித்தப்பா, சித்தி ஆகியோரிடம் கேட்டு வருகிறார். இதை பயன்படுத்தி இயக்குனரும் ட்ராக்கை ஹேமா பக்கம் திருப்பியுள்ளார். இவ்விதமாக ப்ரோமோவில் பாரதியிடம் நீங்க உங்க மனைவியை விவாகரத்து செய்ய போறீங்க அப்படின்னா! அது என்னோட அம்மா தானே? அப்போ என்னோட அம்மா உயிரோடுதான் இருக்காங்களா? என கேள்வி மேல் கேள்வி அடுக்க பாரதியும் எப்போதும் போல சமாளித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால் அந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் ஹேமா விடுவதாக தெரியவில்லை. அவர் தொடர்ந்து குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் என்னுடைய அம்மா எங்க இருக்காங்க? அப்பா யாரை விவாகரத்து செய்ய போறாங்க? என கேட்க யாராலும் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. இந்நிலையில் பாரதியும் விடாமுயற்சியாக எப்படியாவது கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இந்த பக்கம் விவகாரத்து குறித்து அறிந்த லட்சுமி என்ன செய்வதென புரியாமல் இரவு முழுவதும் தூங்காமல் யோசித்து கொண்டு கவலையில் இருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது லட்சுமி மற்றும் ஹேமாவை வைத்து தான் பாரதியும் கண்ணம்மாவும் இணைவார்கள் என தெளிவாகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here