விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கதாபாத்திரம் – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கதாபாத்திரம் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கதாபாத்திரம் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல திருப்பங்கள் வருவது போல காட்டப்பட்டாலும், இறுதியில் எல்லாம் கனவாக இருப்பதால் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் புதிய கதாபாத்திரம் என்ட்ரி கொடுக்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் TRPயில் போட்டி போடும் சீரியலாக இருக்கும் நிலையில், இந்த சீரியலில் பல திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. சென்ற வாரம் பாரதி தான் அப்பா என்ற உண்மையை கண்ணம்மா லக்ஷ்மிக்கு சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் நடப்பது போல காட்டப்பட்டு அது கனவாக கொண்டு முடிக்கப்பட்டது. அதனால் சில மாதங்களாக சீரியல் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

புது வீட்டில் குடியேறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தி, தனம் – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

மேலும் சமூக வலைத்தளங்களில் சீரியலில் மேலும் சுவாரசியம் வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தினமும் ஒரே கதையை திருப்பி திருப்பி போடுவதும், பல முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றப்படுவதும் சீரியல் TRPயில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறது. இந்நிலையில் கதையில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க பாரதி கண்ணம்மாவில் புதிய என்ட்ரியாக ஒருவர் வர இருக்கிறார். அதாவது சீரியலில் ஒரு குட்டி பெண் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

8 மாதத்தில் 10 கிலோ உடல் எடையை குறைத்த “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – அவரே வெளியிட்ட பதிவு!

அவர் யார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் பலர் இந்த என்ட்ரியால் எதாவது திருப்பம் வரும் என எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் பாரதி கண்ணம்மா நட்சத்திரங்கள் பல விளம்பரப்படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த புகைப்படமும் விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டதாக இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர். மேலும் இது குறித்து முழு விவரத்தை தெரிய இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!