கண்ணம்மாவை பாராட்டிய பாரதி, கடுப்பில் வெண்பா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

0
கண்ணம்மாவை பாராட்டிய பாரதி, கடுப்பில் வெண்பா -
கண்ணம்மாவை பாராட்டிய பாரதி, கடுப்பில் வெண்பா - "பாரதி கண்ணம்மா" சீரியலில் அடுத்து வருபவை!
கண்ணம்மாவை பாராட்டிய பாரதி, கடுப்பில் வெண்பா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் சக்திக்கு நல்லபடியாக ஆப்ரேசன் நடந்து முடிக்க பாரதிக்கு பல பாராட்டுக்கள் வருகிறது. இந்நிலையில் கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் தான் இது நடந்தது என பாரதி சொல்ல கண்ணம்மா அதை கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். மேலும் டிவியில் அதை பார்த்த வெண்பாவிற்கு கோவமாக வருகிறது.

பாரதி கண்ணம்மா:

விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா மற்றும் பாரதி சக்தியின் உயிரை காப்பாற்ற பல முயற்சிகளை செய்கிறார். முதலில் கண்ணம்மாவை நம்பாத பாரதிக்கு அவரின் புத்திசாலித்தனமான நடவடிக்கையை பார்த்து நம்பிக்கை வருகிறது. இறுதியில் இயற்கை சதி செய்ய ஆனால் கண்ணம்மா அந்த நேரம் பார்த்து சரியாக வருகிறார். அதனால் சக்திக்கு சரியான நேரத்தில் இதயம் கிடைக்கிறது.

ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்த மணிமேகலை – வைரலாகும் பதிவு!

இன்றைய எபிசோடில் பாரதி ஆப்ரேசன் செய்ய ஆனால் ரொம்ப மோசமாக இருப்பதாக நர்ஸ் சொல்கிறார். அதனால் சக்தியின் அம்மா அப்பா மிகவும் வருத்தமாக இருக்கின்றனர். பின் அனைவரும் உள்ளே என்ன நடக்கிறது என தெரியாமல் வருத்தமாக இருக்கின்றனர். அப்போது வெண்பாவின் அம்மா ஷர்மிளா கூட என்ன ஆனது என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். அதன் பின் ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்துவிட பாரதி வெளியே வந்து சக்தியின் பெற்றோரிடம் சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

அதை கேட்டு பெற்றோர் சந்தோசப்பட பாரதி பத்திரிகையாளர்களிடம் எல்லாம் நல்லபடியாக முடிந்தது என சொல்கிறார். பின் பெரிய டாக்டர் ஒருவர் பாரதி செய்தது பெரிய சாதனை என சொல்கிறார். பின் இதற்கான செலவுகளை செய்த விக்ரமிற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறார். அப்போது பேசிய பாரதி இதை சிறப்பாக செய்து முடிக்க பல இடங்களில் புத்திசாலித்தனமாக இருந்தது எங்க அட்மின் கண்ணம்மா தான் என சொல்கிறார். அதை கேட்டு கண்ணம்மா மகிழ்ச்சி அடைகிறார். வெண்பாவின் அம்மா பாரதி கண்ணம்மாவை பாராட்டியதை புகழ்ந்து பேச ஆனால் வெண்பாவிற்கு அது கோவமாக வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!