பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவுக்கு ஷாக் கொடுத்த சாரதி – இன்றைய எபிசோட்!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவுக்கு ஷாக் கொடுத்த சாரதி - இன்றைய எபிசோட்!
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவுக்கு ஷாக் கொடுத்த சாரதி - இன்றைய எபிசோட்!
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவுக்கு ஷாக் கொடுத்த சாரதி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்களுக்கு மத்தியில் ரொம்ப போரிங்காக சென்று வந்த பாரதி கண்ணம்மா தொடர் தற்போது ஷாக்கு மேல் ஷாக் வந்து புது புது வியப்புகளுடன் எபிசோடுகள் நகர்கிறது.

பாரதி கண்ணம்மா:

சின்னத்திரையில் எவ்வளவு தான் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சீரியலை விரும்பி பார்க்கும் பார்வையாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அதுவும் தமிழ் சீரியலுக்கு என பெயர் பெற்ற சேனல் என்றால் அது விஜய் மற்றும் சன் தொலைக்காட்சி தான். இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்ப காலத்தில் நல்ல ரீச்சை பெற்று வந்தாலும் கடந்த சில நாட்களாக டல் அடித்து செல்கிறது என்றே சொல்லலாம். ஆனால் அந்த டல்லுக்கு எண்டு கொடுக்கும் வகையில் தற்போது வரக்கூடிய எபிசோடுகள் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

சமையலில் அசத்தும் ஆலியா மானசா, மூக்கு பிடிக்க சாப்பிட்ட சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

வெண்பாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த மாயாண்டி, அவரிடம் இருந்த வெண்பா குறித்த ஆதாரங்களை எல்லாம் நான் அளித்து விட்டேன் என சொல்லி கெஞ்சுவது போல் திடிரென நிலை மாறியுள்ளது. இதைவிட பெரிய ட்விஸ்ட் என்னன்னா இவ்ளோ நாள் ஷர்மிளா பார்த்து வைத்த மாப்பிள்ளை ரோஹித் காமெடி பீஸ் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு அவரா இவர்? என வியக்கும் அளவுக்கு உள்ளது. அட ஆமாங்க! அந்த ரோஹித் அவர்கள்தான் இந்த மாயாண்டியை வெண்பாவிடம் கெஞ்ச வைக்கும் அளவுக்கு அடித்து துவைத்துள்ளார். இவ்வாறு கெஞ்சிய மாயாண்டியை பார்த்த வெண்பாவுக்கு ஒரே ஷாக், அதோடு சேர்த்து இந்த செயலை செய்தது தனக்கு பார்த்த மாப்பிள்ளை என்பது டபுள் ஷாக்.

Exams Daily Mobile App Download

இப்படி சீரியலிலும் ஷாக் கொடுத்து, அதை பார்க்கும் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்து ஒரே ஷாக்காக எபிசோடு நகர்கிறது. இதுமட்டுமல்லாமல் வெண்பாவின் முன்பே மீண்டும் இவரை இப்படி மிரட்டுனா என்ன நடக்கும் தெரியுமா? என கேட்டு அதற்கு மாயாண்டி பேசிய ஒப்புதல் வீடியோவை போட்டு காட்டுகிறார். இதை பார்த்த வெண்பாவுக்கு ஒரே குஷி. மாயாண்டியும் என்னை விட்ருங்க மேடம் மேடம்ன்னு மூச்சுக்கு முன்னூறு வாட்டி கூப்பிட்டு கெஞ்சுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!