வெண்பாவை பெண் பார்க்க வரும் புது மாப்பிள்ளை ரோஹித் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய ட்விஸ்டு!

0
வெண்பாவை பெண் பார்க்க வரும் புது மாப்பிள்ளை ரோஹித் - 'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிய ட்விஸ்டு!
வெண்பாவை பெண் பார்க்க வரும் புது மாப்பிள்ளை ரோஹித் - 'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிய ட்விஸ்டு!
வெண்பாவை பெண் பார்க்க வரும் புது மாப்பிள்ளை ரோஹித் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய ட்விஸ்டு!

சமீப காலமாக வெண்பாவின் திருமண படலம் தொடர்பான கதைக்களத்துடன் நகர்ந்து வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட எபிசோடுகளில் புது மாப்பிள்ளையாக ‘வேலைக்காரன்’ சீரியல் நாயகன் சபரி, ரோஹித் என்ற கதாப்பாத்திரத்தில் களமிறங்க இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

ஒரு காலத்தில், தமிழ் சின்னத்திரையில் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து வந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கொஞ்ச நாளாகவே சறுக்கலை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் லட்சுமி, ஹேமா பற்றி மறைக்கப்பட்டு வந்த உண்மைகள் அனைத்தும் வெளிவந்ததும் இப்போது DNA டெஸ்ட் மட்டும் எடுத்தால் சீரியல் முடிக்கு வந்து விடும் சூழலில் கதை சென்று கொண்டிருக்கிறது. அதனால் இந்த சீரியலை முடிக்க விரும்பாத இயக்குனர், கதைக்களத்தில் பல புதிய கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்து வேறு பாதையில் பயணிக்க வைத்து கொண்டிருக்கிறார்.

‘இதயத்தை திருடாதே’ சீரியல் நடிகர் நவீன் தனது வருங்கால மனைவிக்காக செய்த சர்ப்ரைஸ் – ரசிகர்கள் வாழ்த்து!

அந்த வகையில் இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் முக்கியமான கதையாக வெண்பாவுக்கு வரன் பார்க்கும் படலம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சமீபத்திய எபிசோடுகளில் வெண்பாவின் திருமணம் தொடர்பான காட்சிகள் தான் பெருமளவு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த கதைக்களத்தில் இதுவரை வெண்பாவின் அம்மா ஷர்மிளா 2 மாப்பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வருகிறார். இந்த திருமணத்தை கெடுக்கும் விதமாக வெண்பாவோ தனக்கு ஆண் நண்பர்கள் இருப்பதாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் கூறி முதல் மாப்பிளையை துரத்தி விடுகிறார்.

அதே போல இரண்டாவதாக வரும் சுர்ஜித்திடமும் தனக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பது போல காட்டிக்கொள்கிறார் வெண்பா. அதனால் இரு மாப்பிள்ளைகளும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப்போகிறார்கள். இப்போது இந்த கலாட்டா திருமண கதைக்களத்தில் 3வதாக வெண்பாவை பெண் பார்க்க ‘வேலைக்காரன்’ சீரியல் நடிகர் சபரி, ரோஹித் என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், வெண்பாவை ஒரு சில ரவுடிகள் வழிமறித்து பிரச்சனை செய்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அப்போது அவர்களுடன் சண்டையிட்டு வெண்பாவை காப்பாற்றும் ஹீரோவாக வருகிறார் ரோஹித். பிறகு, ரோஹித் செய்த உதவிக்கு நன்றி கூரும் வெண்பா அவரை வீட்டுக்கு வர சொல்லி அழைக்கிறார். மறுநாள், ரோஹித் வீட்டுக்கு வந்ததும் அவரை அம்மாவிடம் அறிமுகம் செய்து வைக்கிறார் வெண்பா. அப்போது, அவர் தான் வெண்பாவுக்கு பார்த்த அடுத்த மாப்பிள்ளை என்று ஷர்மிளா ஒரு குண்டை தூக்கி போடுகிறார். இப்போது புது மாப்பிள்ளை ரோஹித்தும் வெண்பாவை டீஸ் செய்யும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!