வெண்பாவை வெளியே கொண்டு வந்த ஷர்மிளா, ஹேமாவை சமாதானம் செய்யும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
வெண்பாவை வெளியே கொண்டு வந்த ஷர்மிளா, ஹேமாவை சமாதானம் செய்யும் லட்சுமி - இன்றைய
வெண்பாவை வெளியே கொண்டு வந்த ஷர்மிளா, ஹேமாவை சமாதானம் செய்யும் லட்சுமி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
வெண்பாவை வெளியே கொண்டு வந்த ஷர்மிளா, ஹேமாவை சமாதானம் செய்யும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பாவை கேஸில் இருந்து வெளியே எடுக்க ஷர்மிளா உதவி செய்கிறார். மறுபக்கம் ஹேமா சமையல் அம்மா இல்லாமல் வருத்தப்பட அப்போது சௌந்தர்யாவும் லக்ஷ்மியும் சமாதானம் செய்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா நான் சொல்வதை கேட்டால் தான் இந்த கேஸில் இருந்து வெளியே வர முடியும் உனக்கு ஒரே ஆப்சன் தான் இருப்பதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின் வக்கீல் வந்து பேச எனக்கு தெரிந்த சில விஷயங்களை சொல்கிறேன் என சொல்ல வெண்பா என்ன என கேட்கிறார். அப்போது வெண்பாவிடம் ஷர்மிளா மேடம் எங்களிடம் வந்து பேசும் போது இரண்டு விதமான ஸ்டேட்மென்ட் தயார் செய்ய சொன்னார். ஒன்று உங்களை வெளியே கொண்டு வர மற்றொன்று உங்களை உள்ளையே இருக்க வைக்க என சொல்கிறார்.

பணம் கொடுத்ததை குத்திக்காட்டி பேசிய ஜனார்த்தனன், முல்லையை பார்க்க வந்த தனத்தின் அம்மா – இன்றைய எபிசோட்!

நீங்க ஷர்மிளா சொல்வதை கேட்டால் தான் உங்களுக்கு நல்லது என சொல்ல எதோ காதல் விவகாரம் போல இருக்கிறது. நீங்க இப்போதைக்கு சரி என சொல்லுங்க இன்னும் மாப்பிள்ளை பார்க்க நேரம் ஆகும் காட்டும் மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம் என சொல்லிவிடுங்கள் அப்படியே மாதங்களை கடத்தி பின் நீங்க விரும்பும் பையனை திருமணம் செய்து கொள்ளுங்கள் என சொல்கிறார். அதை கேட்டு வெண்பா சரி தான் என நினைக்கிறார். மறுபக்கம் வெண்பாவிடம் ஷர்மிளா இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கிறது. அதனால் நீ என்ன முடிவு எடுக்கிறாய் என கேட்க அப்போது வெண்பா நீங்க சொன்ன மாப்பிள்ளையை நான் திருமணம் செய்கிறேன்.

பாரதியை நான் இனிமேல் மறந்துவிடுகிறோன் என சொல்கிறார். பின் ஷர்மிளா இப்போது தான் என்னுடைய மகள் போல பேசி இருக்கிறாய் என சொல்கிறார். பின் வக்கீலிடம் என் மகளை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை வெளியே எடுக்க வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் பாரதியை பார்க்க மருத்துவமனைக்கு ஒரு குடும்பம் வருகிறது. கணவன் மனைவி உடன் ஒரு குட்டி பாப்பா வருகிறார். அவர்கள் பாரதி டாக்டரை பார்க்க வேண்டும் என சொல்ல ஆனால் அப்பாயிண்ட்மெண்ட் வாங்காமல் பார்க்க முடியாது என சொல்கிறார்.

அப்போது கண்ணம்மா வர என்ன பிரச்சனை என கேட்கிறார். டாக்டரை பார்க்க வேண்டுமாம் ஆனால் அப்பாயிண்ட்மெண்ட் இல்லை என சொல்ல, நாங்க ரொம்ப தூரத்தில் இருந்து வருவதாகவும் குழந்தைக்கு உடம்பு சரியில்லையே என சொல்கிறார்கள் அப்போது கண்ணம்மா இவங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கள் என சொல்கிறார். பின் அவர்கள் பாரதியை சந்திக்க வர குழந்தைக்கு உடம்பு சரியில்லை மருத்துவரை பார்த்த போது அவர்கள் சென்னையில் உங்களை பார்க்க சொல்லி சொன்னதாக சொல்கிறார். பின் பாரதி அந்த குழந்தையை கொஞ்சிவிட்டு பரிசோதனை செய்ய குழந்தைக்கு பெரிய பிரச்சனை இருப்பது தெரியவருகிறது.

ExamsDaily Mobile App Download

அதை நினைத்து பாரதி வருத்தப்படுகிறார். பின் சில டெஸ்ட்களை எழுதி கொடுக்கிறார். மறுபக்கம் சௌந்தர்யா ஹேமா லக்ஷ்மிக்கு சாப்பாடு கொண்டு வர சமையல் அம்மா வராமல் சாப்பிடமாட்டேன் என ஹேமா சொல்கிறார். அப்போது லட்சுமி வர நான் மாலை அம்மா வேலை செய்யும் மருத்துவமனைக்கு போவேன் அங்கே நீயும் வா நாம இருவரும் சேர்ந்து படிக்கலாம் என சொல்ல ஹேமா சரி என சொல்கிறார். பின் இருவரும் சாப்பிட தொடங்குகின்றனர். பின் வெண்பா கேஸ் கோர்ட்டிற்கு வருகிறது. நீதிபதி முன் வக்கீல் வாதாட வெண்பா கேஸ் தள்ளுபடி செய்யப்படுகிறது. வெண்பா மருத்துவ தொழிலை பார்க்கலாம் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதனால் வெண்பா சந்தோஷத்தில் இருக்க ஷர்மிளா கெத்தாக ஜூஸ் குடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!