‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வெண்பா வெளியிட்ட வீடியோ!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - வெண்பா வெளியிட்ட வீடியோ!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - வெண்பா வெளியிட்ட வீடியோ!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வெண்பா வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அடுத்து வரும் எபிசோட் குறித்த வீடியோ ஒன்றை வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 8 வருடங்களுக்கு பின்னர் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தை என்ற உண்மை தெரிய வருகிறது. இது பற்றி கண்ணம்மா கேட்க சௌந்தர்யா எதுவும் சொல்லாமல் சமாளிக்கிறார். மேலும் வெண்பாவிற்கும், பாரதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என்ற உண்மையை அஞ்சலி சொல்கிறார். அதனால் ஹேமா தன்னுடைய குழந்தையாக இருப்பாளா? என்ற சந்தேகம் கண்ணம்மாவிற்கு வந்துள்ளது.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ இல் குக் வித் கோமாளி புகழ்? அவரே சொன்ன பதில்!

இவ்வாறு பல திருப்பங்களுடன் கதை சென்றாலும், அஞ்சலி பிரசவத்தின் போது இறந்து விடுவார் என்ற உண்மை வெண்பாவிற்கு தெரிந்துள்ளது. அஞ்சலிக்கு என்ன ஆகும் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. மேலும் வெண்பா அஞ்சலியை கொல்ல விஷ மாத்திரைகளை கொடுத்துள்ள விஷயம் தெரிய வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு பல ட்விஸ்ட்கள் உள்ள நிலையில், வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பரினா அடுத்து வர உள்ள எபிசோட் என ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ள பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!!

அதில் வெண்பா பின்னர் கண்ணம்மா செல்கிறார். ஆனால் அவரிடம் பேசாமல் வெண்பா நகர்ந்து செல்கிறார். கண்ணம்மா கோபத்துடன் கடற்கரையில் வைத்து அவரிடம் கேள்வி கேட்பது போல உள்ளது. இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள், ஹேமா பாரதி DNA டெஸ்ட் ரிப்போர்ட் பற்றி கண்ணம்மா கேட்கிறாரா? இல்லை அஞ்சலியின் உடல்நிலை பற்றி கேட்கிறாரா? என குழப்பத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!