
வெண்பாவின் தற்கொலை சூழ்ச்சியில் சிக்கும் பாரதி – காப்பாற்றுவாரா கண்ணம்மா? சீரியலில் அதிரடி திருப்பம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி கிடைக்காத விரக்தியில் வெண்பா தூக்கிட்டு கொள்வதை போல பயமுறுத்தி பாரதியை தன் வழிக்கு கொண்டு வருவதை போலவும், கண்ணம்மா அவரை காப்பாற்றுவாரா என்பது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
ஒவ்வொரு நாளும் பல்வேறு ஸ்வாரசியமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கடந்த ஒரு சில நாட்களாக எதிர்பாராத பல ட்விஸ்டுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 10 ஆண்டுகள் கழித்து உண்மையை கண்டுபிடிக்க முயற்சித்து பாரதி, கண்ணம்மாவை கோவிலுக்கு அழைத்து செல்ல, அங்கு நடைபெறும் சில விஷயங்கள் பாரதிக்கு கண்ணம்மா மீதுள்ள உண்மையை தெளிவுபடுத்துகிறது.
விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் இருந்து விலகும் ராஜு – ரசிகர்கள் ஷாக்!
இருந்தாலும் பாரதி ஒரு டாக்டர் அல்லவா. அதனால் கடவுளை விட அறிவியல் சொல்வதை நம்பும் பாரதி, கண்ணம்மா மீதுள்ள சந்தேகத்தை மறப்பது போல தெரியவில்லை. இருந்தாலும் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொள்ளும் பாரதி, அவருக்கு ஒரு நிபந்தனை வைக்கிறார். மறுபக்கத்தில் பாரதியை திருமணம் செய்துகொள்வதற்கு அனைத்து வில்லத்தனமான வேலைகளையும் பார்த்து வந்த வெண்பாவுக்கு பாரதியின் மனமாற்றம் பேரிடியாக விழுகிறது.
இந்த விரக்தியில் வெண்பா தூக்கிட்டு கொல்வதை போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், வெண்பாவின் இந்த தற்கொலை நாடகத்தை நம்பி பாரதி மீண்டுமாக வெண்பா பக்கம் சாய்வது போலவும், வெண்பாவின் பிடியில் இருந்து கண்ணம்மா பாரதியை காப்பாற்றுவாரா என்பது குறித்தும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ஷாக்கிங் ஆன ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் வெண்பாவுக்கு இப்படி காமெடி செய்வது எல்லாம் கை வந்த கலை ஆகி விட்டது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.