பிறந்தநாள் விழாவில் கண்ணம்மா சொல்லப்போகும் உண்மை என்ன? பாரதி வருவாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவின் பிறந்த நாளிற்கு பாரதி வருவாரா மாட்டாரா என்ற குழப்பம் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனால் சீரியலில் அடுத்து வர உள்ள திருப்பங்கள் குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது.
கண்ணம்மாவின் திட்டம்:
விஜய் டிவியின் சீரியல்களில் மிகவும் பரபரப்பாக எப்போதும் செல்லும் தொடர் பாரதி கண்ணம்மா தான். பாரதி கண்ணம்மா சீரியலில் ஏதாவது ஒரு ட்விஸ்ட் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் ஏதாவது புது திருப்பங்கள் சீரியலில் வந்து கொண்டு தான் உள்ளது. இதனால் தான் ரசிகர்கள் சீரியலை தொடர்ந்து முன்னிலையில் வைத்துளார்கள். பாரதி கண்ணம்மா மீது வைத்திருக்கும் சந்தேகம் தான் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது.
2வது திருமணத்திற்கு பிறகும் தாலி ஏன் அணியவில்லை? ஜூலி கேட்ட கேள்வி! தாமரை சொன்ன விளக்கம்!
கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்த்தது பாரதி தான் என்கிற உண்மை கண்ணம்மாவிற்கு 9 வருடங்களுக்கு பிறகு தான் தெரிய வருகிறது. ஆனால் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தை என்கிற விஷயம் கண்ணம்மாவிற்கும், பாரதிக்கும் தெரியாது. அதில் ஒரு குழந்தையை சௌந்தர்யா எடுத்துக் கொண்டு வந்து பாரதியிடம் ஹேமா என்ற பெயரை வைத்து வளர்க்க கொடுக்கிறார். அது தன் குழந்தை தான் என்கிற உண்மை தெரியாமல் பாரதி மிகவும் பாசமாக வளர்த்து வருகிறார்.
நிறைமாத கர்ப்பத்துடன் ‘ராஜா ராணி 2’ ஆல்யா & சஞ்சீவ் குழுவினருடன் கொண்டாட்டம் – வைரல் வீடியோ!
இந்நிலையில், கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமி அடிக்கடி அப்பாவை பற்றி கண்ணம்மாவிடம் கேட்டு வருகிறாள். இதனால் தன் பிறந்த நாள் அன்று அப்பா வருவார் என்று கண்ணம்மா சொல்லி விடுகிறாள். இன்றைய எபிசோடில் கண்ணம்மாவின் பிறந்த நாளும் வருகிறது. பாரதி கண்ணம்மாவின் பிறந்த நாளுக்கு வர மாட்டேன் என்று சொல்ல, எப்படியாவது பாரதியை வரவழைக்க இன்று ஒரு உண்மையை சொல்லப்போவதாக கண்ணம்மா பாரதியிடம் சொல்லிவிட்டு செல்கிறாள். அது என்ன என்று அறிந்து கொள்ள பாரதி ஆர்வமாகிறார். ஆனால் கண்ணம்மா ஹேமாவும் தன் குழந்தை தான் என்ற விஷயத்தை பாரதியிடம் சொல்ல இருப்பதாக நினைத்துக் கொள்கிறாள். கண்ணம்மா பிறந்த நாளிற்கு பாரதி வருவாரா? ஹேமா பற்றிய உண்மையை கண்ணம்மா சொல்வாரா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.