மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்! ப்ரோமோ ரிலீஸ்!

0
மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? விறுவிறுப்பாகும் 'பாரதி கண்ணம்மா' கதைக்களம்! ப்ரோமோ ரிலீஸ்!
மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? விறுவிறுப்பாகும் 'பாரதி கண்ணம்மா' கதைக்களம்! ப்ரோமோ ரிலீஸ்!
மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்! ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் ஒன்றாக சேர வேண்டும் என முயற்சி எடுக்கும் வடிவு, அதற்கான காரியத்தில் ஈடுபட இப்படியே போனால் விரைவில் கண்ணம்மா கர்ப்பமாகி விடுவார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

கடந்த சில எபிசோடுகளாக கலகலப்பும், விறுவிறுப்புமாக நகர்ந்து வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மிக முக்கியமான திருப்பம் ஒன்று அரங்கேற இருக்கிறது. இதுவரை கோர்ட் வற்புறுத்தலின் படி கண்ணம்மாவுடன் ஒரே வீட்டில் வசித்து வரும் பாரதிக்கு, கண்ணம்மாவுடன் வாழ்ந்த பல அழகிய தருணங்கள் நினைவில் வந்து டிஸ்டர்ப் செய்கிறது. இருந்தாலும், ஒருபோதும் கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கும் பாரதியை சரிப்படுத்த சௌந்தர்யா ஒரு புது திட்டம் போட்டிருக்கிறார்.

விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – “காற்றுக்கென்ன வேலி” ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அந்த வகையில் பாரதி, கண்ணம்மா இருவரையும் சேர்த்து வைப்பதற்காக இந்த சீரியலில் வாய்தா வடிவுக்கரசி என்ற கதாப்பாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவர் சௌந்தர்யா அனுப்பிய ஆள் என்று பாரதி, கண்ணம்மாவுக்கு தெரியாத பட்சத்தில் இவர் உண்மையான வக்கீல் என இருவரும் நம்புகின்றனர். இப்படி இருக்க பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைப்பதற்காக வாய்தா வடிவுக்கரசி மேற்கொண்டுள்ள முதல் திட்டம் ஒன்று ப்ரோமோவாக வெளியாகி இருக்கிறது.

அதாவது, தனது வீட்டுக்கு நிறைய சொந்தக்காரர்கள் வந்திருப்பதாக கூறும் வடிவுக்கரசி, அவர்களை ஒரு ராத்திரிக்கு மட்டும் கண்ணம்மா வீட்டில் தங்க வைத்துக்கொள்ளுமாறு கேட்கிறார். இதற்கு, தான் ஹாலில் படுப்பதாகவும், பாரதி பெட் ரூமில் படுத்து உறங்குவதாகவும் கண்ணம்மா பதில் சொல்கிறார். உடனே வழக்கம் போல கோபப்படும் வடிவு, ஜட்ஜுக்கு போன் செய்வதாக மிரட்டல் விடுக்க இருவரும் பெட் ரூமில் படுத்துக்கொள்வதாக ஒப்புக்கொள்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வெளியான வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இப்போது பெட் ரூமில் வைத்து, தூக்கத்தில் மேலே கை போடும் வேலை எல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது என கண்ணம்மாவை எச்சரிக்கும் பாரதி, புரண்டு போய் கண்ணம்மா அருகில் படுத்து விடுகிறார். பிறகு சுதாரித்து விழித்து கொள்ளும் பாரதி தலையில் அடித்துக்கொண்டு, திரும்பிப் படுக்க தூக்கத்தில் இருக்கும் கண்ணம்மா பாரதி மீது கை போடுவது போல சில காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம் பிடித்திருக்கிறது. இப்படியே போனால் விரைவில் கண்ணம்மா கர்ப்பமாகி விடுவார் போல என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here