யாருக்கும் தெரியாமல் லக்ஷ்மிக்கு DNA டெஸ்ட் எடுக்கும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்து வரும் எபிசோடுகள்!

0
யாருக்கும் தெரியாமல் லக்ஷ்மிக்கு DNA டெஸ்ட் எடுக்கும் பாரதி - 'பாரதி கண்ணம்மா' அடுத்து வரும் எபிசோடுகள்!
யாருக்கும் தெரியாமல் லக்ஷ்மிக்கு DNA டெஸ்ட் எடுக்கும் பாரதி - 'பாரதி கண்ணம்மா' அடுத்து வரும் எபிசோடுகள்!
யாருக்கும் தெரியாமல் லக்ஷ்மிக்கு DNA டெஸ்ட் எடுக்கும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்து வரும் எபிசோடுகள்!

தன் அப்பாவை தேடி திரிந்த லட்சுமி யாரும் எதிர்ப்பாராத விதமாக பாரதி தான் தன் அப்பா என்பதை அறிந்து கொண்டு மிகவும் பாசமுடன் பாரதியுடன் நடந்து கொள்கிறார். இந்நிலையில் பாரதிக்கும் இதனால் சந்தேகம் வருகிறது. இது பற்றி அடுத்து வரும் எபிசோடுகளில் புதிய திருப்பங்கள் வர உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த சில வாரங்களாக ரேட்டிங் மிகவும் பின்தங்கிய நிலையில் சென்றது. இதனால் சீரியல் குழு கதையை மீண்டும் விறுவிறுப்பாக மாற்றும் வகையில் புதிய திருப்பங்களை கொண்டு வந்துள்ளது. பல நாட்களாக தன் அப்பாவை தேடி அலைந்து கொண்டிருந்த லக்ஷ்மிக்கு உண்மை கண்ணம்மா வாயாலேயே தெரிந்து விட்டது. ஆனால் தனக்கு பாரதியை பற்றிய உண்மை தெரியும் என்று லட்சுமி யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அனைவரிடமும் சற்று வித்தியாசமாக நடந்து கொள்கிறார்.

சினிமா இலட்சியத்தை அடைந்த எழில், மகிழ்ச்சியில் பாக்கியா – பாக்கியலட்சுமி அடுத்து வரும் திருப்பங்கள்!

அனைவருக்கும் லட்சுமி ஏன் இப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறார் என்று குழப்பமாக உள்ளது. அதேசமயம் அப்பாவை தேடி அலைந்து கொண்டிருந்த லட்சுமி இப்போது அதை பற்றி பேசுவதே கிடையாது. ஆனால் பாரதியுடன் மிகவும் பாசமாக நடந்து கொள்கிறார். திடீரென்று பாரதியை டாக்டர் அப்பா என்று அழைக்க தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் பாரதிக்கும் சற்று வித்தியாசமாக தோன்ற ஆனால் லட்சுமி மீது கொண்ட பாசம் காரணமாக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் வரும் வாரத்தில் லக்ஷ்மிக்கு பள்ளியில் காய்ச்சல் அதிகமாகிறது. பள்ளியில் இருந்து கண்ணம்மாவிற்கு கால் செய்து அழைக்கின்றனர். அப்போது ஹேமாவை பார்க்க வந்த பாரதி லக்ஷ்மியின் நிலையை பார்த்து எதை பற்றியும் யோசிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கிறார். அப்போது பரிசோதைக்காக லக்ஷ்மியின் ரத்த மாதிரியை எடுக்கின்றனர். அப்போது பாரதிக்கு ஒரு எண்ணம் வருகிறது.

லட்சுமி ஏன் என் மேல் இவ்வளவு பாசமாக இருக்கனும், அதுமட்டுமில்லாமல் தனக்கும் லட்சுமி மீது ஒரு தனி பாசம் இருக்க தானே செய்கிறது. அதனால் DNA டெஸ்ட் எடுத்தால் என்ன என்று யோசித்து அதை எடுக்கவும் செய்கிறார். சோதனையின் முடிவில் தான் லட்சுமி தன் குழந்தை என்ற விஷயம் தெரிய வரும். இதனால் அடுத்து வரப்போகும் எபிசோடுகளில் இது குறித்த காட்சிகள் வர உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!