வெண்பாவை திருமணம் செய்ய துர்காவை அழைத்து வரும் ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் திடீர் திருப்பம்!

0
வெண்பாவை திருமணம் செய்ய துர்காவை அழைத்து வரும் ஷர்மிளா -
வெண்பாவை திருமணம் செய்ய துர்காவை அழைத்து வரும் ஷர்மிளா - "பாரதி கண்ணம்மா" சீரியலில் திடீர் திருப்பம்!
வெண்பாவை திருமணம் செய்ய துர்காவை அழைத்து வரும் ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் திடீர் திருப்பம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா பாரதியை மறந்தால் தான் கேஸில் இருந்து வெளியே எடுப்பேன் என ஷர்மிளா சொல்ல, வெண்பா எல்லாத்துக்கும் சம்மதம் சொல்கிறார். இந்நிலையில் ஷர்மிளா நாளைக்கே உன்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வருவார் என சொல்கிறார். அதனால் அந்த மாப்பிள்ளை யாராக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்வார்களா என்பதை காட்டாமல் இருவரும் அவர்களது வேலையை பார்த்து வருகின்றனர். பாரதி மருத்துவமனையில் குழந்தையின் உயிரை காப்பாற்ற முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால் வெண்பாவின் கதை தான் பெரிய சிக்கலில் இருக்கிறது. வெண்பா மருத்துவமனை திறப்பு விழாவிற்கு செல்ல அப்போது போலீசார் அவரை கைது செய்கிறார். வெண்பா கோர்ட் உத்தரவை மதிக்காமல் இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

விஜய் டிவி மைனா நந்தினிக்கு திடீர் ஆப்ரேசன் – வெளியான வீடியோ! ரசிகர்கள் அதிர்ச்சி!

வெண்பா ஷர்மிளாவிடம் வெளியே எடுக்க சொல்லி கெஞ்சுகிறார். ஆனால் ஷர்மிளா நான் வெளியே எடுக்க வேண்டும் என்றால் நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய வேண்டும் என கண்டிஷன் போடுகிறார். வெண்பா சரி என சொல்ல வெண்பா கேஸில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, டாக்டர் தொழிலை தொடர்ந்து செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெண்பாவிடம் ஷர்மிளா நாளைக்கே உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

அதை கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைய ஷர்மிளா யாரை மாப்பிள்ளையாக தேர்வு செய்ய இருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு சிலர் அது வருணாக இருக்குமா என சந்திக்கப்படுகின்றனர். ஆனால் வெண்பாவை துர்கா காதலித்து வந்ததால் அவரை தான் ஷர்மிளா மாப்பிள்ளையாக தேர்வு செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி அடுத்து வரும் எபிசோடுகளில் தெளிவான விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!