மீண்டும் ஜெயிலுக்கு சென்ற வெண்பா – வேறு திருமணம் செய்யும்படி மிரட்டும் ஷர்மிளா! ப்ரோமோ ரிலீஸ்!
சட்டத்திற்கு மாறுதலாக வெண்பா கருவை கலைக்க நினைத்ததால் வெண்பாவை மீண்டும் போலீசார் கைது செய்தனர். நான் உன்னை காப்பாற்ற வேண்டுமென்றால் நீ, நான் சொல்லும் பையனை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென ஷர்மிளா வெண்பாவை மிரட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது புதிதாக சீரியலில் வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்ற புதிய கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெண்பாவின் அம்மா வெண்பாவை விட படு வில்லியாக இருப்பார் என எதிர்பார்த்த சமயத்தில் வெண்பாவிற்கு ஷர்மிளா வில்லியாக இருந்து வருகிறார்.
கார் விபத்தில் மாட்டிக்கொண்ட ‘பாக்கியலட்சுமி’ ஜெனி – அவரே வெளியிட்ட பதிவு!
அதாவது பாரதியை எப்படியாவது கண்ணம்மாவுடன் சேர்த்து வைத்துவிட்டு வெண்பாவிற்கு வேறு திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஷர்மிளா நினைத்து கொண்டிருக்கிறார். வெண்பாவே ஷர்மிளாவை பார்த்து மிகவும் பயப்படுகிறார். அந்த அளவுக்கு வெண்பாவை ஷர்மிளா மிரட்டி வைத்திருக்கிறார். ஏற்கனவே சட்டத்திற்கு மாறுதலாக வெண்பா கருவை கலைக்க ஒப்புக்கொண்டதால் வெண்பாவை போலீசார் கைது செய்தனர். அதற்கு பின்பு மீண்டும் ஜாமினில் வெளியே வந்தார். ஜெயிலில் இருந்து வந்த பிறகும் கூட பாரதியையும் கண்ணம்மாவையும் பிரிக்க தான் வெண்பா பிளான் போட்டபடி இருந்தார். தற்போது மீண்டும் போலீசார் வெண்பாவை கைது செய்கின்றனர்.
ஷர்மிளாவிடம் வெண்பா காப்பாற்றும்படி கெஞ்சுகிறார். உடனே ஷர்மிளா நான் உனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். அதாவது விடுதலையாகி வந்த பிறகு உன் வாயில் இருந்து பாரதி என்கிற பெயரை நான் கேட்கவே கூடாது. அதுமட்டுமல்லாமல் நான் சொல்லும் பையனை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறுகிறார். இது அனைத்திற்கும் உனக்கு சம்மதம் என்றால் உன்னை நான் வெளியே எடுக்கிறேன் என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.