லட்சுமிக்கு சமைத்து கொடுத்ததால் கோவத்தில் பாரதி, வெண்பாவை வர வைத்து வெறுப்பேத்த திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
லட்சுமிக்கு சமைத்து கொடுத்ததால் கோவத்தில் பாரதி, வெண்பாவை வர வைத்து வெறுப்பேத்த திட்டம் - இன்றைய
லட்சுமிக்கு சமைத்து கொடுத்ததால் கோவத்தில் பாரதி, வெண்பாவை வர வைத்து வெறுப்பேத்த திட்டம் - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
லட்சுமிக்கு சமைத்து கொடுத்ததால் கோவத்தில் பாரதி, வெண்பாவை வர வைத்து வெறுப்பேத்த திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வீட்டிற்கு சென்று லட்சுமிக்கு சமைத்து கொடுத்த போட்டோவை பார்த்த பாரதி பயங்கரமாக கோபப்படுகிறார். பின் வெண்பாவை அழைத்து சமைத்து தர சொல்லி ஒன்றாக சாப்பிட்டு சௌந்தர்யாவையும் வேணுவையும் வெறுப்பேத்துகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா கண்ணம்மாவின் இரட்டை குழந்தையில் ஒரு குழந்தை இருக்கும் இடம் தெரியும் என கண்ணம்மாவை ஏமாற்றியதை சாந்தியிடம் சொல்லி சந்தோசப்படுகிறார். கண்ணம்மா குழந்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என அழுது கொண்டே என்னிடம் கெஞ்சினாள் என சொல்கிறார். எனக்கு எப்படி இரட்டை குழந்தை பற்றி தெரியும், நான் தெரிஞ்ச மாதிரி நடந்து கொண்டேன் என வெண்பா சொல்லி சிரிக்கிறார்.

ஹேமா சௌந்தர்யாவின் போனில், கண்ணம்மா வீட்டிற்கு சென்று லட்சுமிக்கு சமைத்து கொடுத்து அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வந்த பாரதி, ஹேமா போனை பார்த்து கொண்டிருப்பதை பார்க்கிறார். லட்சுமி கூட எடுத்த எல்லா போட்டோவும் நல்ல இருக்கு பாட்டி என ஹேமா சொல்ல பாரதி போனை புடுங்கி பார்க்கிறார். அதில் லட்சுமி உடன் இருக்கும் புகைப்படங்களை பார்த்து பயங்கரமாக கோபப்படுகிறார்.

ஒரே நாளில் நாடு முழுவதும் 2 கோடி தடுப்பூசி – பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு சாதனை!

பின்னர் எதற்கு இப்படி பண்ணீங்க என கேட்க, அவள் என்னுடைய பேத்தி என சொல்கிறார். அவளே எனக்கு பிறந்தவள்இல்லை என சொல்கிறேன். ஆனால் என் பேச்சை கேட்காமல் இப்படி பண்றீங்க என சொல்லி, வெண்பாவை வர வைக்கிறார். வெண்பா இப்போ எதற்கு என்னை வர சொன்ன என கேட்க, எனக்கு சமைத்து தர சொல்லி தான் என பாரதி சொல்கிறார். பின் வெண்பாவும் பாரதியும் சேர்ந்து சமைக்கின்றனர். அதை பார்த்து சௌந்தர்யாவும் வேணுவும் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர்.

அதன் பின் பாரதியும் வெண்பாவும் சேர்ந்து சாப்பிட சௌந்தர்யா செம கோவத்தில் இருக்கிறார். பின் வெண்பாவை அங்கிருந்து அனுப்பிய பாரதி, வெண்பா என்னை கல்யாணம் பண்ண தயாராக இருக்காள், நீங்க இதே போல செய்தால் கட்டாயம் அவளை கல்யாணம் செய்வேன் என மிரட்டுகிறார். மறு பக்கம் கண்ணம்மா இரட்டை குழந்தையில் ஒரு குழந்தை பற்றி நினைத்து அழுது கொண்டிருக்கிறார். சௌந்தர்யா சொன்னதையும் வெண்பா சொன்னதையும் நினைத்து பார்க்கிறார்.

செப் 27ம் தேதி வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய பந்த் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

அஞ்சலிஅகில் மீது கோவத்தில் அமர்ந்திருக்க, வெளிய போவோமா என அகில் கேட்கிறார். நான் வரவில்லை என அஞ்சலி கோபத்துடன் இருக்க ஏன் இப்படி இருக்க என அகில் கேட்கிறார். நான் பரிகாரம் தான செய்ய வேண்டும் என கேட்கிறேன் எனக்காக அதை கூட செய்யமாட்டியா என அஞ்சலி சொல்ல, சரி என அகில் சொல்கிறார். அஞ்சலி மகிழ்ச்சியில் இருக்கிறார். உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம் என அகில் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!