பாரதியை நினைத்து பெருமைப்படும் குடும்பத்தினர், திருமணத்தை நிறுத்த சொல்லும் வெண்பா – இன்றைய எபிசோட்!

0
பாரதியை நினைத்து பெருமைப்படும் குடும்பத்தினர், திருமணத்தை நிறுத்த சொல்லும் வெண்பா - இன்றைய எபிசோட்!
பாரதியை நினைத்து பெருமைப்படும் குடும்பத்தினர், திருமணத்தை நிறுத்த சொல்லும் வெண்பா - இன்றைய எபிசோட்!
பாரதியை நினைத்து பெருமைப்படும் குடும்பத்தினர், திருமணத்தை நிறுத்த சொல்லும் வெண்பா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி சக்திக்கு ஆப்ரேசன் செய்ததை நினைத்து குடும்பத்தில் அனைவரும் சந்தோசப்படுகின்றனர். பின் வெண்பா ஷர்மிளாவிடம் திருமண ஏற்பாடுகளை நிறுத்த சொல்லி கெஞ்சுகிறார். ஆனால் முடியாது என சொல்ல பாரதிக்கு போன் செய்து என்னை கண்ணம்மா உடன் வெறுப்பேற்றுவது போல நடந்து கொண்டதால் தான் நான் கோவமாக பேசினேன் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி சக்தி ஆப்ரேசனை நல்லபடியாக முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அப்போது ஹேமா என் நண்பர்கள் எல்லாரும் உன் அப்பா அருமையாக ஆப்ரேசன் செய்ததாக சொன்னார்கள் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது என சொல்கிறார். நீங்க சரியான நேரத்தில் இதயத்தை கொண்டு வருவீர்களா என நான் பயந்தேன் ஆனால் நீங்க சரியான நேரத்தில் கொண்டு வந்துடீங்க என சொல்கிறார். பின் சௌந்தர்யா இவன் எல்லா விதத்திலும் நல்லவனாக தான் இருக்கிறான் ஆனால் கண்ணம்மா விஷயத்தில் ஏன் கெட்டவனாக இருக்கிறான் என கேட்கிறார். எல்லாம் சரியாகிவிடும் என வேணு சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் வெண்பா ஷர்மிளாவிடம் வந்து கை கால் வலி இருப்பதாக சொன்னியே என சொல்லி பிடித்துவிடுகிறார். அப்போது ஷர்மிளா நீ என்னுடைய மகள் காரியம் இல்லாமல் இப்படி எல்லாம் செய்யமாட்டியே என கேட்கிறார். அப்போது வெண்பா நீ என்னுடைய அம்மா என் விருப்பத்தை மீறி எதுவும் செய்யமாட்ட தான, நாளைக்கு என்னை பெண் பார்க்க வர சொல்ல வேண்டாம் என சொல்ல, அப்போது ஷர்மிளா ஏன் என்ன ஆனது என கேட்கிறார். பாரதிக்கு சீக்கரம் விவாகரத்து ஆகிவிடும் அப்புறம் என்னை அவன் திருமணம் செய்து கொள்வான் என சொல்ல, நீ அவனை நம்பலாம் ஆனால் நான் நம்ப மாட்டேன் என சொல்கிறார்.

இன்று கூட எல்லாரும் ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்தது ஆனால் அவன் முழு பொறுப்பையும் கண்ணம்மா மீது போடுகிறான் அவன் கண்ணம்மாவை விவாகரத்து செய்ய மாட்டான் என சொல்கிறார். நீ சொல்வது சரியாக இருந்தாலும் நீ சொல்லும் மாப்பிள்ளையை நான் திருமணம் செய்யமாட்டேன் என சொல்ல ஷர்மிளா சொன்னது சொன்னது தான் கோர்ட் வாசலில் நடந்தது மறந்துவிட்டதா என கேட்கிறார். ஷர்மிளா சொன்னதை கேட்டு வெண்பா கோபப்படுகிறார். பின் கண்ணம்மாவிற்கு சௌந்தர்யா போன் செய்கிறார்.

திடீரென கர்ப்பமாகும் ஐஸ்வர்யா – தனக்கு மட்டுமே குழந்தை பிறக்காதா? ஏக்கத்தில் முல்லை!

அப்போது லட்சுமி கேள்வி கேட்காமல் இருந்தாளா என கேட்க, ஆமாம் என கண்ணம்மா சொல்கிறார். சௌந்தர்யா நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் பாரதி விவாகரத்து கொடுக்க போறேன் என சொன்னதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்கிறார். சொல்லி என்ன ஆக போகுது அதனால் தான் சொல்லவில்லை. இந்த விஷயம் எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்க லட்சுமி சொன்னதாக சொல்கிறார். சௌந்தர்யா எனக்கு நம்பிக்கை இருக்கிறது நீங்க சேருவீங்க என சொல்கிறார். பின் லட்சுமி கண்ணம்மாவிற்கு திருஷ்டி சுற்றி போடுகிறார்.

கண்ணம்மா லக்ஷ்மியை நினைத்து பெருமைப்படுகிறார். மறுபக்கம் வெண்பா இதை இப்படியே விட கூடாது பாரதியிடம் பேச வேண்டும் என போன் செய்கிறார். அப்போது பாரதி இந்த நேரத்தில் ஏன் போன் செய்கிறாள் என நினைத்து போனை எடுக்கிறார். அப்போது வெண்பா உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. நீ நல்லபடியாக ஆப்ரேசன் முடித்துவிட்டாய் உன்னை நண்பன் என சொல்லவே பெருமையாக இருக்கிறது. ஆனால் என்னை தான் நீ மதிக்கவே இல்லை போலீஸ் ஸ்டேஷன் வரவும் இல்லை, வீட்டிற்கு வந்த பின் கூட நீ பேசவே இல்லை என சொல்கிறார்.

நீ இறங்கி வந்து என்னிடம் பேசவே மாட்டாய், நீ கண்ணம்மாவை பிடிக்காது என சொல்லிவிட்டு அவளுடன் நெருக்கமாக இருக்கிறாய் என சொல்கிறார். இன்று கூட கண்ணம்மாவை பெருமையாக பேசுகிறாய் அதெல்லாம் பிடிக்காமல் தான் செய்தாயா என கேட்கிறார். உன்னிடம் பேசாமல் இருந்தது எனக்கு வருத்தம் தான் என சொல்லி பாரதி வெண்பாவிடம் பேசுகிறார். பின் வெண்பா நான் நினைத்ததை நடத்தி காட்ட எந்த அளவிற்கும் நான் செய்வேன் என நினைக்கிறார். பாரதி கண்ணம்மா வெறுப்பேத்தியதால் தான் வெண்பா என்னிடம் கத்தி இருக்கிறாள் என நினைக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here