கண்ணம்மாவை வெறுப்பேத்தி அசிங்கப்பட்ட வெண்பா, பிறந்தநாள் விழா பற்றி பாரதியிடம் சொல்லும் ஹேமா – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மாவை வெறுப்பேத்தி அசிங்கப்பட்ட வெண்பா, பிறந்தநாள் விழா பற்றி பாரதியிடம் சொல்லும் ஹேமா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவை வெறுப்பேத்தி அசிங்கப்பட்ட வெண்பா, பிறந்தநாள் விழா பற்றி பாரதியிடம் சொல்லும் ஹேமா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவை வெறுப்பேத்தி அசிங்கப்பட்ட வெண்பா, பிறந்தநாள் விழா பற்றி பாரதியிடம் சொல்லும் ஹேமா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா பாரதிக்கு போன் செய்து தனியாக இருப்போம் என சொல்ல பாரதி நான் வரவில்லை என சொல்கிறார். பின் லட்சுமி போன் செய்து லட்சுமி அப்பா பற்றி அம்மா பிறந்தநாளில் சொல்ல இருப்பதாக சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா பாரதிக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய் என கேட்கிறார். ரூமில் தான் என பாரதி சொல்ல, எந்த ஹோட்டல் என கேட்கிறார். என்னுடைய வீட்டில் தான் இருக்கிறேன் என சொல்ல, அங்கே தான் இருக்க வேண்டாம் என சொன்னார்கள் ஏன் அங்கே இருக்காய் நான் வேண்டும் என்றால் தனியாக வீடு பார்க்கவா என கேட்க அதெல்லாம் வேண்டாம் என பாரதி சொல்கிறார். பின் பாரதி சொன்னதை நினைத்து வெண்பா கோவமாக இருக்கிறார்.

எவ்வளவு நல்ல வாய்ப்பு வந்தது ஆனால் இப்படி ஆகிவிட்டதே என சாந்தி சொல்ல, வெண்பா கடுப்பாகிறார். பின் லட்சுமி சௌந்தர்யாவிற்கு போன் செய்ய ஹேமா அதை எடுக்கிறார். லட்சுமி எல்லாருக்கும் கேக்கும்படி ஸ்பீக்கரில் போட சொல்ல, லட்சுமி என் அம்மாவிற்கு பிறந்தநாள் வருகிறது அதை நாங்க நல்லபடியாக கொண்டாட இருக்கிறோம் என சொல்ல, வேணு அம்மாவிற்கு என்ன பரிசு கொடுக்க போகிறாய் என கேட்கிறார். என் அம்மா தான் எனக்கு பரிசு கொடுக்க போகிறார். அதாவது அம்மா என்னுடைய அப்பா யார் என சொல்ல போவதாக சொல்ல, அதை கேட்டு சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார்.

TN Job “FB  Group” Join Now

எல்லாரும் கண்டிப்பாக வந்துருங்க என் அப்பாவை பார்க்க டாக்டர் அங்கிளை கண்டிப்பாக கூட்டிக் கொண்டு வாருங்கள் என சொல்கிறார். பின் ஹேமா ரொம்ப சந்தோசம் லட்சுமி நீண்ட நாட்களாக இதை பற்றி தான் பேசுவாள் என சொல்ல, கண்டிப்பாக என்னை சமையல் அம்மா வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போங்க என சொல்கிறார். மறுபக்கம் கண்ணம்மா கோவிலில் இருக்க வெண்பா மற்றும் பாரதி கோவிலுக்கு வருகின்றனர். வெண்பா கண்ணம்மாவை வெறுப்பேற்றுவது போல நடந்து கொள்கிறார்.

கண்ணம்மாவிற்கு கேட்கும்படி சத்தமாக கூப்பிடுகிறார். பின் வெண்பா பாரதி பேரில் அர்ச்சனை செய்கிறார்கள். வெண்பாவிற்கு விபூதி வைக்க அதை பாரதி ஊதிவிடுகிறார். அதை பார்த்து கண்ணம்மா கடுப்பாகிறார். வெண்பா பாரதியை அழைத்துக் கொண்டு கண்ணம்மாவை வெறுப்பேத்தலாம் என கூப்பிடுகிறார். என்ன கண்ணம்மா தனியாக இருக்கிறாய் நீ எப்போதும் தனியாக தான இருப்பாய் என சொல்கிறார். நேற்று என்னுடைய வீட்டில் இருக்க வந்த பாரதியை விடாமல் செய்தாய் ஆனால் இப்போது என்ன செய்ய முடியும் என கேட்கிறார்.

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஆங்கிலம், கணித பாட அட்டவணை!

உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என கேட்க கண்ணம்மா கோபப்படுவதை பார்த்து வெண்பா வெறுப்பாகிறார். அப்போது வயதானவர் ஒருவர் வந்து நீ டாக்டர் வெண்பா தான என கேட்க ஆமாம் எதாவது மருத்துவம் பார்க்க வேண்டுமா என கேட்கிறார். உன்னிடம் வைத்தியம் பார்க்கவா நீ வயிற்றில் இருக்கும் குழந்தையை காசுக்காக கொல்ல கூட செய்கிறாய் நீ எல்லாம் இந்த கோவிலுக்கு வர கூடாது. அது பாவம் என சொல்கிறார். தம்பி உன்னை பார்த்தால் படித்த பையன் போல இருக்கிறாய் ஆனால் இந்த பொண்ணு கூட இருக்கிறாய் என கேட்கிறார். ஒழுங்காக இந்த கோவிலை விட்டு ஓடிவிடு என சொல்கிறார். பின் கண்ணம்மா நீயே வந்து அசிங்கப்பட்ட நல்லவங்களா ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கஷ்டம் வந்தால் நம்ம கூட நிற்பான் என சொல்லி வெண்பாவை அசிங்கப்படுத்துகிறார்.

உன்னால் தான் எல்லாம் என பாரதி வெண்பாவை திட்டுகிறார். பின் பாரதியிடம் வந்து கூப்பிட என்ன ஷாப்பிங் போறிங்களா என கேட்கிறார். நான் எனக்கு மிகவும் பிடித்த தோழி வீட்டிற்கு போறேன் என சொல்ல, பாரதி யோசிக்கிறார். நாங்க சமையல் அம்மா வீட்டிற்கு போறோம் என சொல்ல, சமையல் அம்மா பிறந்தநாள் விழா நன்றாக கொண்டாட இருக்கிறார். அதற்கு நாங்க போறோம் என சொல்கிறார். நீங்களும் சமையல் அம்மா பிறந்தாளுக்கு வர வேண்டும் என சொல்ல, பிறந்தநாள் விழா பற்றி சொல்லு என சௌந்தர்யா சொல்கிறார். சமையல் அம்மா அவங்க பிறந்தநாள் அன்று லட்சுமி அப்பா யார் என சொல்ல போவதாக சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!