விரைவில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? வில்லி வெண்பா விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை பரினாவிடம், இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
தமிழ் சின்னத்திரையில் சுமார் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் வெளியாகி கொண்டிருக்கும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் எப்போதும் TRP ரேட்டிங்கில் முதன்மையான இடத்தை பிடிப்பது வழக்கம். அதே போல இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். சமீபத்தில் இத்தொடரில் கண்ணம்மா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி சீரியலை விட்டு விலக, அவருக்கு பதிலாக இத்தொடரில் வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.
இதே போல இத்தொடரில் அஞ்சலியாக நடித்து வந்த நடிகை ஸ்வீட்டியும் தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார். ஆனால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இவர்களுடன் அறிமுகமாகி வில்லி வெண்பா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினா சுமார் 4 ஆண்டுகாலமாக இந்த சீரியலுக்கு தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ‘பாரதி கண்ணம்மா சீரியலின் கதையோட்டத்திற்கு முக்கிய காரணமாக இருப்பவரே வில்லி வெண்பா தான். இவர் மட்டும் இல்லயென்றால் இந்த சீரியல் இவ்வளவு பிரபலமாகி இருக்காது என்பது மெய்யே.
விரைவில் நடக்க இருக்கும் கெளதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பரினா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகை பரினா, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு கேள்வி, பதில் செக்மெண்டை நடத்தி வருகிறார். அதில் ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்து வரும் பரினாவிடம், ரசிகர் ஒருவர் எப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவுக்கு வரும் என்று கேட்டுள்ளார். இதற்கு சீரியல் முடிவடையவே வேண்டாம் என்று நடிகை பரினா பதிலளிக்க இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.