வெண்பாவை திருமணம் செய்ய இஷ்டமில்லை என கூறிய பாரதி, சந்தோஷத்தில் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

0
வெண்பாவை திருமணம் செய்ய இஷ்டமில்லை என கூறிய பாரதி, சந்தோஷத்தில் குடும்பத்தினர் - ப்ரோமோ ரிலீஸ்!
வெண்பாவை திருமணம் செய்ய இஷ்டமில்லை என கூறிய பாரதி, சந்தோஷத்தில் குடும்பத்தினர் - ப்ரோமோ ரிலீஸ்!
வெண்பாவை திருமணம் செய்ய இஷ்டமில்லை என கூறிய பாரதி, சந்தோஷத்தில் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் ரேட்டிங் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. மிகவும் விறுவிறுப்பாக, பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் பலரின் ஃபேவரைட் சீரியலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்|:

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆனால் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள் வருவதால் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதனால் கதையில் சில மாற்றங்களை சீரியல் குழு செய்து வருகிறது. தற்போதைய கதைப்படி ஹேமாவும், லட்சுமியும் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கண்ணம்மா, பாரதி கேஸ் ஹியரிங் வர உள்ளது. மற்றொருபுறம், வெண்பாவிற்கு அவரது அம்மா சர்மிளா மாப்பிள்ளை பார்த்து உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் மாப்பிள்ளை ரோகித் கேரக்டரில், ‘வேலைக்காரன்’ சீரியலில் லீட் ரோலில் நடித்த சபரிநாதன் களம் இறங்கியுள்ளார். அதாவது ரோகித் என்ட்ரி, வெண்பாவை ரவுடிகளிடமிருந்து ரோகித் காப்பாற்றுவது போல் இருந்தது. மேலும் ரோஹித்துடன் நட்பான வெண்பா, அவர்தான் தனக்கு பார்த்த மாப்பிள்ளை என்று தெரியாமலே வீட்டிற்கு வர சொல்லுவார். அவர் வீட்டிற்கு வந்த உடன் தான் தெரியும், சர்மிளா வெண்பாவிற்கு பார்த்த மாப்பிளை இவர்தான் என்று, இதை அறிந்த வெண்பா அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்.

மேலும் ரோஹித்திடம், தான் பாரதியை காதலிக்கும் விஷயத்தையும் அவர் சொல்லிவிட்டார். இருப்பினும் ரோஹித் எனக்கு இந்த விஷயமெல்லாம் முன்னதாகவே தெரியும் என்று கூறி வெண்பாவிற்கு பல்பு கொடுத்துவிட்டார். இந்நிலையில் இந்த வார ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் சர்மிளா ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்கிறார். அந்த பார்ட்டிக்கு பாரதி பேமிலியை இன்வைட் பண்ணி உள்ளார், மேலும் கண்ணம்மாவும் வருகை புரிந்து உள்ளார். அந்த சமயத்தில் சர்மிளா, வெண்பாவை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் ரோஹித்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – இனி தடுப்பூசி அவசியம் இல்லை!

அப்போது வெண்பா நான் பாரதியை தான் லவ் பண்றேன்னு சொல்லி விட்டார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர், மேலும் பாரதி அனைவரின் முன்னிலையில் நான் வெண்பாவை லவ் பண்ணல, எனக்கு வெண்பாவை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை என்று சொல்லிவிட்டார். இனி அடுத்து என்ன நடக்கும் என்பதை எபிசோடில் பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!