விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியின் தங்கையாக நடித்த ஸ்ருதி சண்முகப்ரியா தனது காதலரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சுருதி சண்முகப்ரியா:

சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான நாதஸ்வரம் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்ரியா. குடும்ப பாங்கான பெண்ணாக இருப்பதால் அவருக்கு ஏகப்பட்ட குடும்ப ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அவர் விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மாவில் பாரதிக்கு தங்கையாகவும் சௌந்தர்யாவின் மகள் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடக்கத்தில் சௌந்தர்யாவிற்கு கருப்பாக இருப்பவர்களை பிடிக்காமல் இருந்தது.

கோலாகலமாக தொடங்கிய தமிழ், சரஸ்வதி திருமணம் – பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!

சௌந்தர்யாவின் மகள் கருப்பாக இருக்கும் ஒருவரை காதல் திருமணம் செய்ய அவர்களுக்கு கருப்பாகவே பெண் குழந்தை பிறக்கிறது. அதனால் அவர் அந்த குழந்தையை வெறுத்து ஒதுக்கும் கொடூரமான பாட்டியாக காட்டப்பட்டார். ஆனால் அவர் கண்ணம்மாவை பார்த்த பின் கருப்பாக இருந்தாலும் குணம் தான் முக்கியம் என உணர்ந்துக் கொண்டார். இந்நிலையில் சௌந்தர்யாவின் மகளாக நடித்த ஸ்ருதி சண்முகப்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இல் என்ட்ரி கொடுத்த புகழ் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

அதில் தனக்கு திருமணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை அரவிந்த் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். சின்னத்திரை பிரபலங்கள் பலர் திருமணம் செய்து கொண்டுவரும் நிலையில் தற்போது இவரும் அந்த வரிசையில் இணைந்து இருக்கிறார். அருமையாக நடிகை என்பதால் இவருடைய திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here