ரோஷினி, வினுஷா 2 கண்ணம்மாவுடன் தொடங்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
ரோஷினி, வினுஷா 2 கண்ணம்மாவுடன் தொடங்கும் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 - அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
ரோஷினி, வினுஷா 2 கண்ணம்மாவுடன் தொடங்கும் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 - அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
ரோஷினி, வினுஷா 2 கண்ணம்மாவுடன் தொடங்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவி ” பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி மற்றும் புதிய கண்ணம்மா வினுஷா இருவரும் இணைந்து சீசன் 2 தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் ஆதரவை பெற்ற முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் தொடக்கத்தில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் மற்றும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்து வந்தார். கண்ணம்மா பாரதியின் கல்யாணம் முதல், கண்ணம்மா கர்ப்பமாக இருப்பதை பாரதியிடம் சொன்னது, பாரதியின் சந்தேகத்தால் வீட்டை விட்டு வெளியேறியது என அனைத்து சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Vijay TV Bigg Boss 5 Promo | போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டிக்கெட் டூ பைனல் டாஸ்க்!

இந்நிலையில், கண்ணம்மா ரோஷினி திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு சீரியலில் நடிப்பதால் பட வாய்ப்புகள் குறைவாக வருகிறது. அதனால் சீரியலில் விலகியதாக காரணம் சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக கண்ணம்மா போலவே இருக்கும் வினுஷா தேவி தற்போது நடித்து வருகிறார். அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரோஷினியின் இடத்தை நிரப்பி இருக்கிறார். மேலும் கதையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலக நடிகரும், பாடகருமான மாணிக்க விநாயகம் மரணம் – உறவினர்கள் அஞ்சலி!

தற்போது பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். பாரதியை லக்ஷ்மிக்காக பிரிய மாட்டேன் என கண்ணம்மா உறுதியாக இருக்கிறார். மேலும் வெண்பா ஜெயிலில் இருந்து வெளியே வர இருக்கிறார். அவருக்கு பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ்வது தெரியாது. அதனால் சீரியலில் அடுத்து என்ன மாதிரி மாற்றங்கள் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் லட்சுமி சௌந்தர்யா வீட்டில் இருந்து கிளம்பியதால் அவர் கடத்தப்படுவாரா என அடுத்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். இந்நிலையில் பழைய கண்ணம்மா ரோஷினி மற்றும் புது கண்ணம்மா வினுஷா இணைந்து நடிக்கும் சீசன் 2 தொடங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!