‘பாரதி கண்ணம்மா சீசன் 2’ சீரியலில் பாரதியுடன் இணையும் 2 கண்ணம்மா – ப்ரோமோ ரிலீஸ்!

0
'பாரதி கண்ணம்மா சீசன் 2' சீரியலில் பாரதியுடன் இணையும் 2 கண்ணம்மா - ப்ரோமோ ரிலீஸ்!
'பாரதி கண்ணம்மா சீசன் 2' சீரியலில் பாரதியுடன் இணையும் 2 கண்ணம்மா - ப்ரோமோ ரிலீஸ்!
‘பாரதி கண்ணம்மா சீசன் 2’ சீரியலில் பாரதியுடன் இணையும் 2 கண்ணம்மா – ப்ரோமோ ரிலீஸ்!

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு என்பது அதிக அளவில் உள்ளது. இதனால் விரைவில் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் வர உள்ளதாக ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா 2:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தான் தற்போது சின்னத்திரையின் ஒட்டு மொத்த ஹாட் டாபிக் ஆக உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் கதைக்களம் சற்று வித்தியாசாக இருப்பதால் அதிக அளவிலான ரசிகர்களை பெற்றுள்ளது. மருத்துவரான பாரதி தான் காதலித்து திருமணம் செய்த மனைவி கண்ணம்மா மீது சந்தேகப்பட தொடங்குகிறார். இதனால் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து காட்டுகிறார். இவர்களுக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்ற விஷயம் தெரியாமல் ஆளுக்கு ஒரு குழந்தையை வளர்த்து வருகின்றனர்.

‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி & மணிமேகலைக்கு நடந்த சம்பவம் – பெங்களூரு விசிட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா இருவரின் மோதல் எப்போது முடியும் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். இவர்களின் கதாபாத்திரத்திற்கு தகுந்த படியான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது சீரியலின் வெற்றிக்கு தனிச்சிறப்பாக உள்ளது. முதலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி மிகவும் சிறப்பாக நடித்து வந்தார், அதன்பிறகு அவருக்கு பின்னர் வினுஷா என்பவர் தற்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரின் நடிப்பும் மிகவும் அருமையாக தான் உள்ளது.

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – கோதையின் இறுதி நிமிடங்கள்!

இதனால் பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் வரஇருக்கிறது. இதில், ரோஷினி மற்றும் வினுஷா இருவருமே நடிக்க உள்ளனர். அதேபோல் பாரதி வேடத்தில் அருண் தான் நடிக்க உள்ளார். இரண்டு கண்ணம்மாவையும் வைத்து புதிய கதைக்களம் எப்படி அமைக்கப்படும் என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!